பக்கம்:நாலும் இரண்டும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறப்ப நினையுங்கால் 19-3-1976 பிறவியைப் பற்றியும் பிறந்த பின் பெறும் வாழ்க்கை யினைப் பற்றியும் பலவாறு கூறிய ஆசிரியர் சற்றே நின்று கினைத்துப் பார்க்கிருர். பிறப்பு இன்னததுதான் என் ருலும் யாரும் அதனிடம் கோபங்கொள்ளவோ வெறுக் கவோ இல்லையே என்பதை எண்ணிப் பார்க்கின்ருர். 'உண்டா லம்ம இவ் வுலகம் என்ற உணர்வு அவர் சிந்தனையைக் கிளறுகின்றது. அதற்குரிய காரணத்தையும் அதே புற நானூற்று ஆசிரியர் கூறிய அடிஒன்றி எண்ணி ருப்பார். தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே இவ்வுலகம் வாழ்கிறது - இன்பில் திளேக்கிறது என்று முடிவு கட்டியிருப்பார் ஆம் அவ்வா றுள்ள தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் யார்? அவர்கள் தாம் கல்வவர் - பண்பா டறிந்தவர் - பிறர் கடுஞ்சொல் பொறுத்துச் சினத்தை வென்றவர். பண்புடையார் பட்டுண் டுலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்' என அறம் பாடிய அந்தக் கருத்தும் இந்தப் புலவர் உள்ளத் தில் புகுந்திருக்கும். எனவ்ே ஒரு நல்ல முடிவுக்கு வருகிருர், வந்து கண்ட் உண்மையினப்பாட்டாக வடிக்கிரு.ர். பண்புடைநெஞ்சம் அவர் உள்ளத்தில் கிழலாடுகின்றது; இந்த உலகம் பாராட்டும் அவ்வுடைமையை உள்ளம் வியக் கின்றது. நயனெடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு என்ற குறள் நெறி உணர்ந்த நிலையிலே அப்பண்புடையாராம் நல்லவர்தம் உயர்நிலையினை எண் ஆ) கிருர். அன்பு நெஞ்சத்திலே முகிழ்க்க வேண்டிய இன்றி மையா நிலையினையும் அப்படி முகிழ்த்த உளங் கொண்ட 66 .