பக்கம்:நாலும் இரண்டும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறப்ப நினையுங்கால் கல்லவர் வாழ்க்கை நெறியினையும் காணுகிருர். ஒரு மன கிறைவு பிறக்கிறது. உலகம் இன்னு உலகமா? என்று திரும்பத் திரும்ப அவர் உள்ளம் கேட்கிறது. இதோ நல்ல பண்பாளர்கள் உள்ளார்களே! இவர்களைப் பார்; இவர் களோடு கலந்த பிறகுமா உலகு இன்னதது என்ற உணர்வு பிறக்கும்? பின் இவர்கள் வாழ்வது எதற்காக? என்ற கேள்விகள் பிறக்கின்றன. தடுமாறு உள்ளத்தில் தளர்ச்சி நீங்குகின்றது. நல்லவரோடு சேர்ந்தபின் நாட்டில் நலிவு ஏது? தீமை ஏது? யாவும் இன்பமே யன்ருே! இவற்றையெல்லாம் எண்ணிய அவர் உள்ளத்திலே இன்பமே எந்நாளும் துன்ப மில்லை என்று அப்பரடிகள் பெற்ற துணிவு பிறக்கிறது. அப்பரடிகளார் எல்லார்க்கும் கல்லோரான இறைவனை அடைந்தமையின் அந்த இன்பத்தைப் பெற்றதாகப் பாடு .கிருர். கோமாற்கே காமென்றும் மீளா ஆளாக் கொய் மலர்ச் சேவடியிணையே குறுகினேமே-எனவே - இன்பமே எங்காளும் துன்பமில்லை என அவர் பாடுகிருர், நாலடியார் ஆசிரியரோ, இறப்ப நினையுங்கால் இன்னு தெனினும் பிறப்பினை யாரும் முனியார்-பிறப்பினுள் பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் - கண்பாற்றி நட்கப் பெறின் (18-4) எனப் பாடுகிரு.ர். . - இதில் ஆசிரியர் சொற்களே எண்ணி எண்ணிப் பெய் கின்ருர். பண்புடையார்' என்னது பண்பாற்று நெஞ்சத் தவர் என்கிருர். உண்மையிலேயே உளத்தால் ஒட்டுவது தானே உயர்ந்தது - சிறந்தது - என்றும் உலவுவது. அதிலும் -பண்புடை என்னது பண்பாற்றும் என்று அதன் உயர்வைச் சொல்லாலே குறிக்கின்ருர் மேலும், அவர் 67