பக்கம்:நாலும் இரண்டும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் களொடு கொள்ளும் நட்பு எந்த நாளும் எந்த வேளை யிலும் நீங்காதிருக்கவேண்டும் என்று கருதி, எஞ்ஞான்றும் என்கிருர். அதற்கு மேலும் நண்பாற்றி என நட்பின் தன்மையினே அத்தொடரால் சுட்டியதோ டமையாது கட்கப் பெற்றின் என மறுபடியும் வற்புறுத்துகிருர், இத்தனையும் சொல்லிவிட்டு அது - அந்த நட்பு அவ்வளவு எளிதாகப் பெறக் கூடியதன்று என்ற உண்மையினைப் பெறின் என்ற சொல்லாலே சுட்டிவிட்டார், பெறுதல் எளிது அன்றுதான். ஆனல் பெற்றுவிட்டால் - கினைத்து நினைத்து கெடிது கண்ட உலகம் இன்னதது என்ற கொடுமை மறைந்து விடும். அப்போது உலகம் இன்பச் சோலேயாகத் திகழும், அப்போது யார்தான் உலகை முனிவர்? - வெறுப்பர்? - வேண்டாமென ஒதுக்குவர்? ஆகவே, இந்தப் பாடலின் வழியே உலகில் நலமுற்று வாழநல்ல பண்பாளர் உறவைப் பெற்று வாழ வழி காட்டி விட்டார் காலடியாரின் ஆசிரியர். நாமும் அவர் வாய்மொழிப் படி நல்ல பண்பாட்டாளருடன் என்றும் இயைந்து இன் புற்று வாழ்வோமாக. - 68.