பக்கம்:நாலும் இரண்டும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ சீதையைத் தேடுமாறு வானர வீரர்களே அனுப்பிய சுக்கிரீவன் தென்திசைக்கு அங்கதன் தலைமையில் அனுமனே யும் அனுப்புகின்ருன். அவர்கள் பரந்த பாரத நாட்டு எல்லைகளே யெல்லாம் கடந்து, பைந்தமிழ் நாட்டினையும் தாண்டி, தென்கரையை அடைகின்ருர்கள். அவர்கள் அனை வரையும் அங்கேயே கிறுத்தி. அனுமன் விண் வழியே கடல் கடந்து இலங்கை நகரை அடைகின்ருன். வழியில் எத்தனே எத்தனையோ இடர்கள்; அனைத்தும் கடக்கும் ஆற்ருல் பெற்றவனதலின், அனுமன் எல்லாவற்றையும் கடந்து இலங்கை நகரை அடைகின்ருன். அங்கும் இலங்கை மாதேவி என்பாள் எதிர்க்கிருள். அவள் தோற்றமும் ஆற்றலும் கம்பரால் பலவாறு பாராட்டப் பெறுகின்றன. ஆயினும் அத்தகையவளே அனுமன் எதிர்க்கிருன்; விண்ணில் தூக்கி எறிகிருன்; கொல்லவும் நினைக்கிருன்; ஆயினும் பெண்ணு யிற்றே என இரங்குகிருன். எனவே ஓங்கி அறைகிருன். அவள் அதைத் தாங்காது அரற்று கிருள்; பின் நிறுத்துகிருள்; உணர்கிருள். நாமெல்லாம் வாழ்க்கை நெறி உணர உணர்த்துகிருள். கம்பன் வையம் வாழ வாழ்வு நெறி. கண்டவன். அந்நெறியை நேராக நீதி நூலாக்காது, தன் காவியமாகிய இராமாயணத்தில் அங்கங்கே விளக்கமாகவும் இலைமறை காயாகவும் இட்டும் சுட்டியும் செல்கின்ருன். அத்தகைய இடங்களில் இதுவும் ஒன்று. 69