பக்கம்:நாலும் இரண்டும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலும் இரண்டும் அனுமன் கைப்பட்டு அடங்கிய இல்ங்கை மாதேவி 'அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற உண்மையை உலகுக்குத் தன் வாயால் விளக்கிக் காட்டுகிருள். முக்கோடி வாழ்நாட்களைப் பெற்ற இராவணனுடைய கொடுமைகளை இலக்கியம் முழுதும் காணலாம். அவ்விராவணன் கொடு மைகளாகிய மறச் செயல்களால் அல்ல லுற்ருர் பலர். எத்தனையோ வகையில் அவர்கள் அக்கொடுமைகளுக்குத் தப்ப முயன்றனர். எனினும் முடியவில்லை. அதனல் இராவணன் தானே உயர்ந்தவன் எனத் தருக்கி நின்ருன். அவன் கொடுமைகள் எல்லே மீறின. எத்தனை நாள்கள்? முக்கோடி நாள்கள். ஆனல் முடிவு என்ன? அவன் மறம் அழியத்தானே வேண்டும்? உலகில் அறம் என்றும் செத்து விடாது; நிலத்து நின்று காலம் பார்த்துக்கொண்டிருக்கும். ஆம்! மறச் செயல் எத்துணை வகையில் கொடிய ஆட்சி செலுத்தினும்-எத்தனை நாள்கள் கோலோச்சி வாழினும்முடிவில் அறம் வெல்லும் என்பது வாழ்க்கை நெறியின் உண்மைத் தத்துவம் ஆகும். அதற்குக் காலம் கடந்து விட்டது எனக் கவல வேண்டுவது இல்லை. . - இன்று உலகில் சிலர் "நாம் இவ்வளவு நேர்மையாக நடக்கிருேமே நமக்கு எல்லாத் துன்பங்களும் வருகின் றனவே. அதோ அக்கிரமமே உருவான அவன் எத்தனைச் சிறப்பாக வாழ்கிருன் நாமும் அப்படித்தான் வாழ வேண்டுமோ என எண்ணுகின்றனர்; பேசுகின்றனர். ஏன் அதுவே இன்றைய வாழ்க்கை நெறியின் மேல்வரிச் சட்டம் எனக்கூட வாதிடுகின்றனர். அவர்களே எல்லாம். சிந்திக்கவும் முடிவு கண்டு சிரிக்கவும் வைக்கிருள் இலங்க்ை மாதேவி. பிரமனின் கட்டளையால் இராவணனுக்கு முக்கோடி வாழ்நாட்கள் தொண்டு செய்தவள் அவ்ஸ். முடி 70