பக்கம்:நாலும் இரண்டும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் வெல்லும் பாவம் தோற்கும் வினை உணர்ந்து, தன் வாழ்வினையும் பிரமனுடைய சாபத் தையும் குரங்கின் கைப்பட்டு விடுதலை பெறகின்ற வகையை யும் காட்டி, பின்னர், அன்னதே முடிந்த தைய அறம்வெல்லும் பாவம் தோற்கும் என்னும் ஈதியம்ப வேண்டும் தகையதோ' r (ஊர்தேடு படலம்) எனக் காட்டுகிருள். எவ்வளவு பொருத்தமான உண்மை. ஆம்! என்றைக் காயினும் அடங்கிய அறம் வெற்றி பெறும் என்பது உறுதி. ஆனல் அதற்குக் காலம் பார்க்க் வேண்டும். இன்றைய மக்களாட்சி நிலையிலும் சரி, அன்றைய மன்னராட்சி கிலேயிலும் சரி இவ்வுண்மையே மெய்யாக்கப் படுவதைக் காண்கிருேம். அது மட்டுமன்றித் தனி மனித வாழ்விலும் இக்கூற்று மெய்யாக நடைபெறுவதைக் காண் கிருேம். கண்டு கொண்டே மக்களாகிய நாம் நல்வாழ்வின் நெறிவிட்டு மாற்று வழியினைப் பின்பற்றிக்கொண்டே செல் கின்ருேம். அதேைலயே அற உளம் வாய்ந்த நல்லவர்கள் அவ்வப்போது தத்தம் வாழ்க்கை வழியும் வாய்மொழி வழி யும் பலப்பல உண்மைகளே உணர்த்திக் கொண்டே இருக் கின்றனர். அவற்றையெல்லாம் கண்டும் கற்றும் மற்றவர் களுக்கு நாமே உரைத்தும் கூட நம் வாழ்வில் பின்பற்றத் தயங்குகிருேம். ஆனல் இந்தத் தயக்கம் நீங்கின லன்றி உய்வில்லை. குறைந்த வாழ்நாட்களே யுடைய நம் காலத்திய கடப்பு களைக் கண்டே குறைப்பட்டுக் கொள்ளும் நாம், முககோடி நாள்கள் மூண்ட கொடுமையை எண்ண வேண்டும் என்பது கம்பன் கருத்து. அதையும் அத்துன்ப நீக்கத்தின் தொடக்க வாயிலிலே உணர்த்துகின்றன். எனவே எத்துணைக் கொடு மையாயினும் அது காலத்தை வென்று வாழாது என்பதும் என்ருயினும் ஒரு நாள் அக்கொடுமை அறத்தின் முன் மண்டி 71