பக்கம்:நாலும் இரண்டும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் யிட்டு மழுங்கி அழிய வேண்டுவதே என்பதும் உணர வேண்டுவன. - - இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து மக்களாகப் பிறந்த நாம் நம் கடமை வழியே செயலாற்றுவோமானல் உலகில் துன்பமும் கொடுமையும் இல்லாதொழியும். வையம் வாழத் தாம் வாழ்வதே வாழ்க்கை நெறி. அந்நெறி தவறும் நிலை உண்டாயின் அதற்காக வருந்துவதோ - வாயால் பேசிக் கழிப்பதோ என கில்லாது, தாமே அறவாழ்வைக் கடைப் பிடித்து வாழ வேண்டும் என்பதும் அந்த அற வாழ்வு' ஒன்றே வையத்தை என்றென்றும் வளமாக்கும் என்பதும் கம்பன் உணர்த்திய வாழ்க்கை நெறியாகும். அந்நெறி நம் வாழ்வில் மலர்வதாக! 'யாதும் ஊரே யாவரும் கேளிர் எதிர்பாராது பெருமழை பெய்கிறது. எங்கெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வற்றி வரண்ட வெற்று நிலங்களிலெல்லாம் நீர் பாய்ந்து ஓடுகிறது. அந்த நிலையில் காறுைகள் கரை புரண்டு ஓடுவது இயற்கை யன்ருே காறுை ஒன்றின் வரண்ட நிலையில் தங்கிய ஒரு புனே - மண்ளுேடு மண்ணுய் நின்ற ஒரு புனே பெரு. வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கி விட்டது. மிதக்கும்" நிலையில் அப்புணேயின் செயல் யாதாயிருக்கும்? விரைந். தோடும் வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அதற் குண்டோ? இல்லையே! ஆம்! அந்த வெள்ளம் போகின்ற போக்கிலே அதுவும் செல்ல வேண்டியதுதானே. . சென்ற அப்புனேயைக் கண்ட கண்கள் பல. எனினும், கருத்தில் அதன் செலவைக் கொண்டவை ஓரிரு கண்கள்ே. 72.