பக்கம்:நாலும் இரண்டும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாதும் ஊரே யாவரும்,கேளிர் அவைதாம் புலவர் கணியன் பூங்குன்றன் கண்கள். அக்கண் வழியே பெற்ற காட்சியால் அவர் கருத்தில் ஒரு வாழும் நெறி' உருவாயிற்று. தாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக’ என்ற உணர்வில் வாழ்ந்த அப்புலவர் இதை உவமையாகக் கொண்டு தாம் காட்ட நினைத்த வாழ்க்கை நெறியை ஏட்டில் வடித்துத் தந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் - மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ள காரணத்தால் அது இன்றும் சிறக்க வாழ்கின்றது. § . . . மின்னெடு வானம் தண்துளி தலைஇ ஆனது கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று நீர்வழிப் படுஉம் புனைபோல் ஆருயிர் . முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் - என்று அக்காட்சியால் தெளிந்த உண்மையை விளக்கிக் காட்டுகிருர் பூங்குன்றனர். ஆனால் அத்துடன் அவர் முடித்துவிடவில்லை. அதல்ை உலகு உணர வேண்டிய அற வாழ்வை - மெய் வாழ்க்கையின் மேலாம் நெறியை விளக்க கினைந்து பாடுகின்ருர். 'ஆதலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே . - சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! (புறம்) என்று பூங்குன்றனர் தாம் கண்ட வாழ்க்கை நெறியைக் காட்டி உலகம் என்றென்றும் இவ்வுண்மையைப் போற்ற வேண்டும் என வற்புறுத்துகின்ருர். இவ்வுலகம் இந்த நெறியைப் பின்பற்றில்ை உய்தி உண்டு ஆல்ை...... 73