பக்கம்:நாலும் இரண்டும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் உலகில் மனிதன் எத்தனையோ வகையில் தன்னை உயர்த்திக் கொள்ளப் பாடுபடுகிருன். ஒரு சிலர் உண்மை யில் உழைக்கின்றனர். ஒரு சிலர் போலியாக வாழ்கின்றனர். பொன்னும் மணியும் புனை பூணும் பிறவும் வேண்டிப் பாடு படுவார் பலர். பெரும்பாலோர் - ஏன் - எல்லோருமே தாம் புகழ் பெற வேண்டும் என்ற கருத்திலேயே தம் செயல்களே ஆற்ற கினேப்பர். புகழற்ற செயலாயினும் மறைத்து அதைப் புகழுற்ற தாக்க முயல்வர். இந்த அடிப்படையில் சில உண்மையான உழைப்பாளிகளின் நற்செயல்களும் மறைக்கப்படுகின்றன. தனி மனிதனும் சமுதாயமும் உலக அரசுகளும் இந்தப் புகழ் ஒன்றற்காக எதையும் செய்யத் துணிவதை நாம் காண்கிருேம். ஆனல் உண்மையான புகழ் காலத்தை வென்று வாழ்வதே என உணர்வதில்லை. அத்துடன் அத்தகைய புகழ்ப் பைத்தியத்தால் மற்றவரை இகழும் கிலேயினையும் நாட்டில் காண்கிருேம். இந்த அவல ನಿಶಿಖGu பூங்குன்றனர் உள்ளத்தினைத் தொட்டிருக்கின்றது. ஒரு சிலருக்கு இயல்பாய் அமைந்த சூழல்களால் அரசியல், செல்வம், செல்வாக்கு பிறவற்ருல் சில செயல்கள் செய்ய வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு எத்தகைய திறன் இருப்பினும் வாய்ப்புக்கு வழி இல்லாது போகும். அதல்ை முன்னவரைப் புகழ்வதோ பின்னவரை இகழ்வதோ கூடாது என்பதே பூங்குன்றனர் அறக்கட்டளே. உண்மை யும் அது தானே! - தற்பெருமையாளர்தம் வெற்றுப் புகழ்ச் செயல்கள் அவர்தம் அதிகாரம் முதலியவற்ருல் அவர் நாளில் சிறந்தன. வாக அமையினும் கால வெள்ளம் அவற்றை அடித்துக் கொண்டு செல்வதைத்தானே காண்கிருேம். கடமைக்காகச் செயலாற்றும் மெய்ச் செயல்கள் வாழ, தம் புகழுக்காக 74