பக்கம்:நாலும் இரண்டும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைக்கும் மாற்றுச் செயல்கள் மறைகின்றவே. புகழ் கருதாது தொண்டின் அடிப்படையில் அமைத்த தஞ்சைப் பெரிய கோயில் இன்றும் பெரிய கோயிலாகவே காட்சி யளிக்கும் அதே வேளையில், அதற்குப் பிறகு வெறும் புகழ்த் தம்பமாக - தான் கங்கை கொண்ட காரணத்துக்காக இராசேந்திரன் அமைத்த கங்கை கொண்ட சோழபுரம் அழிந்துவிட வில்லையா? அக்பர் தம் புகழுக்காகக் கட்டிய "பெதர்பூர் சிக்ரியின் நிலை என்ன? - பூங்குன்றனர். இத்தகைய நிலைகளை எண்ணித்தான் போலும் அன்றே இந்த வாழ்வின் அடிப்படை உண்மையை உணர்த்தினர். அவர்தம் ஈற்றடியில் இன்னெரு உண்மை யும் சிறக்கிறது. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்கிருர் அவர். ஆம்! ஒரு வேளை பட்டம், பதவி, செல்வம் பிற காரணங்களால் ஒரு சிலரைப் புகழ்ந்து தான் வாழ வேண்டும் என்ற நிலை உண்டானலும், அப்படிப் புகழ் கின்றவர் மற்றவரையாவது இகழாது இருக்கலாகாதா? தற்பெருமையாகிய புகழையே நாடி ஒடும் இன்றைய உலக வாழ்க்கைக் கிடையில் இவர் காட்டும் வாழ்க்கை நெறி எண்ணிப் பார்க்கவேண்டிய ஒன்றல்லவா? இந்தப் புகழ்ப் பொருமையால் மடிந்த மக்கள் எத்துணையர்? மாமன்னர் எத்துணையர்? மற்றவரைத்தான் எண்ண முடியுமா? இதன. லன்ருே மாணிக்கவாசகர் பேர் வேண்டேன்' என்று புகழை வெறுத்து அஞ்சிப் பாடுகிருர்! இதல்ை ஒன்றும் செய்யாது. சோம்பி இருக்க வேண்டும் என்பது கருத்தன்று. செய்யும் அனைத்தையும் கடமை என்று செய்ய வேண்டுமே யன்றி, வெறும் பெயருக்காகச் செயலாகாது என்பதும் அவ்வாறு செய்ய இயலாதவரை இகழ்தல் கூடவே கூடாது என்பதும் வாழ்வின் அடிப்படை 75