பக்கம்:நாலும் இரண்டும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் நெறிகளாகும். வாழ்வில் இப்பூங்குன்றனருடைய மெய்நெறி மலரும் நாளே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இன்ப வாழ்வு மலரும் நாளாகும். எல்லாரும் இன்புற் றிருக்க: தெய்வ நம்பிக்கையில் திளைக்கும் நாடு நம் நாடு. அன்றும் இன்றும் ஆண்டவனே நினைத்துப் பாடுவார் பலர். வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்ற அப்பர் பெருமான் அடிக்கிணங்க அவனைப் போற்றிப் பரவிப் பயன் பெறுவார் பலர், ஆனால், அவ்வாறு பயன் பெற விரும்புவோர் அனைவரும் தம் வாழ்வு - தம்மைச் சார்க் தவர் வாழ்வு, வளன் என்ற அடிப்படையிலேயே தம் வேண்டுகோளே இறைவன் முன் நிறுத்துவர். ஆயினும் வாழ்க்கை நெறியின் அடிப்படைத் தத்துவத்தை உணர்ந்த வர்தம் வேண்டுகோள் வேறு வகையில் அமைந்திருக்கும். அடியவர் ஒருவர் ஆண்டவனே இடையருது தொழுது போற்றினர். பார்க்கும் இடம் எங்கும் பரமனேயே கண்டார். பறிக்கும் பூவும் பருகும் நீரும் பரமன் தங்கும் நிலைக்களன் களாக அவருக்குக் காட்சி யளித்தன. இத்தகைய உயர்ந்த நிலயில் தம்மை மறந்த அடியவர் முன் இறைவன் வாரா திருப்பானே? இறைவன் காட்சி அளித்தான். என்ன வேண்டும்? கேள்' என்ருன். கம்போன்ருர் முன் இவ்வாறு இறைவன் காட்சி அளித்திருப்பானயின் நாம் ஏதேதோ வாழ்வுக்குத் தேவையானவற்றையும் நம் வாழ்வில் மலர்ச்சி உண்டாக்கத் தக்கனவற்றையும் கேட்போம். ஆனல் அந்த மெய்யடியார் தம்மை மறந்த கிலேயில் என்ன கேட்டார்? 76