பக்கம்:நாலும் இரண்டும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் இன்புற்றிருக்க " எல்லாரும் இன்புற் றிருக்க கினைப்பதுவே அல்லாமல் வேருென் றறியேன் பராபரமே ' என்று கேட்டது அவர் வாய். யார் அந்த அடியவர்? நான் சொல்லாமலே உங்கட்கு விளங்கும். ஆம்! அவர்தாம் 'தாயுமானவர். நல்லவர்தம் வாழ்க்கை நெறி இத்தகையதே. கம் போன்ருர் வாழ்வெல்லாம் நான்', 'எனது' என்ற அகப் பற்று, புறப்பற்றின் காரணமாக அமைகின்ற கிலேயில் நமக்கு வேண்டியவற்றைக் கேட்போம். தாயுமானவர் உலகம் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியைக் காட்ட விரும்புகின்றவர். எனவே இத்தகைய வேண்டுகோளை அவர் உள்ளம் விரும்பிக் கேட்கின்றது. இதுதானே வாழ்க்கை நெறி. & * உலகில் வாழும் உயிரினத்தின் உச்சியில் வாழ்பவன் மனிதன். பிற விலங்குகளுக்கில்லாத ஒரு நல்ல பண்பு மனிதனிடத்தில் உள்ளது. அதுதான் தன்னைப் போல் பிறரை நோக்கும், தனிப் பண்பு. உயிர்கள் வாடினல் தான் வாடி, உலக சமுதாயம் மகிழ்ந்தால் தான் மகிழ்ந்து ஒன்றிய உணர்வில் திளைப்பதற்கே அந்தப் பண்பு துணை செய்யும். இந்த உண்மையைத்தான் உலகம் தோன்றிய நாள் தொட்டு இன்று வரை எல்லா நாட்டினரும் எல்லாச் சமயத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஈதொழிய வேறில்லே எச்சமயத் தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல் என்ற ஒளவை யின் வாக்கு இந்த அடிப்படையில் எழுந்ததே யாகும். - く ஆனல் இன்றைய மனித வாழ்வு இந்த கிலேயில் இருக் கின்றதா? இல்லையே. தனி மனிதனுயினும் சமுதாயமாயினும் பேரரசுகளாயினும் இந்த நெறியில் செல்லவில்லை என்பது 77