பக்கம்:நாலும் இரண்டும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் கண்கூடு. தத்தம் வாழ்வும் வளமும் சிறக்க, எத்தகைய கொடுமையும் செய்யத் தயங்காத மக்களினமே அதிகமாக வளர்ந்து வருவதைக் காண்கின்ருேம் தாம் வாழ மற்றவரை வருக்திலுைம் தவறில்லே என்ற உணர்வு மக்களிடம் மிக்குள்ளதை அன்ருட வாழ்க்கை நெறி விளக்குகின்றது. இதேைலயே நாட்டிலும் உலகிலும் பொதுவாக அமைதி யின்மையும் அல்லலும் மிக்கிருக்கக் காண்கிருேம். இது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்ற காரணத்தால் உலகம் என்னுகுமோ என்ற உணர்வு நல்லவர் உள்ளங்களை வாட்டுகின்றது. இத்தகைய அவல நிலைக்குக் காரணம் என்ன? நாம் .மேலே காட்டிய சுய நலம் ஒன்றேதான். தாயுமான அடிகளார் இச்சுயநலத்தினைப் பொது கலத்தில் மறந்து. விட்டார். காட்டுத் தலைவர்கள் - சமய போதகர்கள்-தத்துவ ஞானிகள் காம் நாட்டுக் குரியவர்கள்' என்பதை மறந்து, 'காடு நமக் குரியது' என எண்ணுகின்ற காரணத்தினுல்தான் தொல்லேயும் துன்பமும் உண்டாகின்றன. இந்த நிலை மாற. வழி என்ன? நான் என்ற உணர்வு நாம் என்ற உணர்வாக மாறின் அல்லது உய்ய வழியில்லை. இந்த நாம் என்பதில் "எல்லாரும் எல்லாமும் அடங்கிவிடும். தாயுமானவர் இவ்வாறு எல்லாரும் இன்பம் பெற வேண்டும் என்றே விழைகின்ருர். இந்த விழைவைத்தான் ஆண்டவன் முன் வைத்து வேண்டுகின்ருர். வேண்டிய வரத்தைக் கேள் என்ற இறைவன் முன் மனமுருகி எல் லாரும் இன்பம் பெற வேண்டும் என்ற வரத்தைக் கேட் கின்ருர் அவர். இறைவன் அந்த வரத்தைக் கொடுத்து, 'இது பொதுவாக அனைவருக்கும் பொருந்துவது உனக்காக ஏதேனும் வேண்டுமாயின் கேள்' எனக் கேட்டிருப்பார் 78