பக்கம்:நாலும் இரண்டும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ் வினையும் ஆள் வினையும் போலும். அதனல்தான் அடுத்த அடி அவர் உள்ளம் காட்டும் அடியாக அமைந்துள்ளது. இறைவனே! உலக. வாழ்வன்றித் தனி வாழ்வில்லை; உலகம் வாழ்ந்தால் - உயிர் கள் இன்ப வாழ்வில் வாழ்ந்தால்-நான் இன்பம் பெற்றவன் ஆவேன். எனவே எனக்கெனத் தனியாக வேருென்றும் தேவையில்லையே' என அவர்தம் நல்லுள்ளம் எண்ணி யிருக்கும். வாய் அவ்வுலக உயிர்கள் இன்புறத்தக்க வேண்டு: கோளே அல்லாமல் வேருென் றறியேன் எனப் பாடி யுள்ளது. இதுவே வாழ்க்கை நெறியின் அடிப்படைத் தத்துவமாகும். இந்த உண்மையை உணராது சுயநலத்தில் மக்கள் சிக்கிய காரணத்தினலேயே எல்லா வகையான கொடுமைகளும் நடைபெறுகின்றன எனக் கண்டோம். இந்த நல்லவர்தம் நூல்களே நாள்தோறும் ஒதியுணர்ந்து வளரும் மனித சமுதாயம் இந்த வேண்டுகோளேயே அன்ருட வாழ்வின் வேண்டுகோளாக அமைத்துத் தெய்வ நலம். ஒம்புமாயின் - அதன் வழியே செயல்படுமாயின் உலகம் இன்பச் சோலேயாக மாறதோ? இதில் வாழும் உயிர் வாழ்வு அன்பு வாழ்வாய்ச் சிறக்காதோ! இந்த அன்பு விளையும் நாள் என்று வருமோ அன்றே வைய வாழ்வு செம்மையாகும். அந்நாள் விரைவில் வருவதாக! ஊழ் வினையும் ஆள் வினையும் வள்ளுவர் வையம் வாழ வழி வகுத்தவர். உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் தம்முள் கலந்து வேறுபாடற்று. ஒன்றிய வாழ்வில் திளேக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அந்த அடிப்படையில் மறம் கடிந்து அறம் ஒம்பும் வாழ்வுக்கு உரிய ஆக்க நெறிகள் பலவற்றை வகுக்கின்ருர் 79