பக்கம்:நாலும் இரண்டும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலும் இரண்டும் அவர். எடுத்துக்காட்ட விரும்பும் ஒவ்வொரு பொருள் பற்றியும் திட்ட வட்டமாக அறிவிக்க நினைக்கிருர், அறி விக்கவும் செய்கிருர். எனினும் இருவேறு பொருள்களின் திறனும் செம்மையும் உயர்வும் பயனும் விளக்க நேரிடும் போது அவர் நடுநிலை பிறழாது உள்ளதை எப்படியும் கூறி விடுகின்ருர் ஆழ்ந்து நோக்கின் அவரது தெளிந்த புலமை வழி உருவாகும் உண்மையின் செம்மை உலகுக்கு நன்கு புலகுைம். ஒவ்வொரு அதிகாரத்திலும் எடுத்துக் கொண்ட பொருளின் செம்மையினையோ அன்றிக் கொடுமையினையோ அதன் எல்லையின் கோடியிலே கின்று காட்டும் வள்ளுவர், அப்பொருள்களை இணைத்துக் காட்டும் போது அவற்றுள் ஒன்றன் மேலாய்ப் பொருந்திய மற்ருென்றன் உயர்வினைக் காட்டத் தவறுவதில்லே. எடுத்துக் காட்டாக ஒன்றினைக் காண்போம். - அறங்களைப் பல வகையில் வகுத்துக் காட்டும் வள்ளுவர் பொய்யாப் பெரு நெறியினையும் அறத்திற் குள்ளேயே அடக்குவர். உள்ளத்தால் பொய்யாது ஒழுகு வார் உயர்வைப் பலபடப் பாராட்டுகின்ருர் வள்ளுவர். ஒருவன் பொய் சொல்ல்ாதிருப்பானுயின், அவன் வேறு எந்த அறமும் செய்யா நிலையிலேயே உயர்வு பெறுவான் என வற்புறுத்திக் காட்டுவார் அவர். - - 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று " என்ற குறளில் அதன் ஏற்றத்தை உச்சியில் வைத்துப் போற்றுகின்ருர் பரிமேலழகரும் பிறரும் இக்குறளுக்குப் பல வகையில் உரைகள் கூறுவர். இத்தகைய உயரிய கிலேயில் காட்டிய பொய்யாமையே உலக அறங்களிலெல் லாம் மேலானது என்றுதான் இந்த அதிகாரத்தோடு 80