பக்கம்:நாலும் இரண்டும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் சிறந்தது என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டி விடுகிருர். இரண்டு அதிகாரங்களிலும்- இருபது குறட் பாக்களிலும் இரு வேறு வினைகள் பற்றிக் காட்டினலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறட்பாவின எடுத்துக் காணின் வள்ளுவர் கொள்கை தெள்ளிதிற் புலனுகும். ஊழே அனைத்திலும் மேம்பட்டது என்பது உலகத்தார் கொள்கை. வள்ளுவர் அக்கொள்கையை மறுக்கவில்லை. அதனினும் பெரு வலிவுள்ளது வேறு இல்லை என அவரும் வற்புறுத்துகின்ருர். ஆனல் அது ஆள்வினை உடைமை யோடு போட்டியிட்டு வெல்லுமா? இக்கேள்விக்கு வள்ளுவர் அவருடைய இயல்பான தெள்ளிய நெறியிலேயே விடை தருகின்ருர். - வகுத்தான் வகுத்த வகையில் வாழ வைக்கும் ஊழ்வினே யைப் பற்றி வள்ளுவர் பத்துக் குறள் வெண்பாக்களால் கன்கு விளக்குகின்ருர். அவற்றுள் இறுதிக் குறளில் 'ஊழிற் பெருவலி யாவுள' என்ற விைைவயும் எழுப்பி, இல்லை என விடை தருமாறு முடிக்கின்ருர் ஊழினும் வேருய பல - ஆள்வினை உடைமை, ஊக்க முடைமை போன்ற செயலாற்றும் திறன்கள் - வந்து சூழ்ந்தாலும் இவ்வூழே அவற்றின் முன்னிற்கும் என்று காட்டுகின்ருர் " ஊழிற் பெருவலி யாவுள மற்றென்று சூழினும் தான்முந் துறும் ' என்பது அவர் வாக்கு. இங்கே பிற செயல்களால் முன்னேறவோ வேறு வகையில் செயலாற்றவோ மனிதன் முயன்ருலும், அவற்றிற் கெல்லாம் முன் ஊழ்வினவந்து தானேமுட்டுக்கட்டையிடும் என்றுதான் வள்ளுவர் கூறுகின்ருர். இதல்ை நாம் 82.