பக்கம்:நாலும் இரண்டும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ் வினையும் ஆள் வினையும் மற்ருேர் உண்மையை உணர்ந்து கொள்கிருேம். மற்ருென்று குழும் காலத்து இவ்வூழ் முன்னிற்குமே ஒழிய அது வெல்லும் என்று வள்ளுவர் கூறவில்லை. முந்துறும் என்பது அவர் வாக்கு. முன்வருவதெல்லாம் வெல்லுவ தாகுமோ? செயலாற்றும் வீரன் தன் ஆள்வினையின் திறத் தால் முன்னிற்பதைத் தள்ளிவிட்டு, மேலே முன்னேறிச் செல்ல முடியுமே இதைத்தான் வள்ளுவர் ஆள்வினை உடைமையில் காட்டுகின்ருர். வேறு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் ஊழ் முன்னிற்குமே .யன்றி, அம்முயற்சி வலுவுடைத்தாகி ஊழை உடைப்ப தாயின், தான் அதை வெல்வது கூடாது என்பதே வள்ளுவர் காட்ட நினைத்த உண்மை. மற்றவைகளைத் தடுக்கும் வகையில் ஊழ் முன்னிற்குமே ஒழிய அது வெற்றி பெருது என்பது தெளிவு. இந்த உண்மையினேயேதான் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் தெள்ளத் தெளியக் காட்டி விடுகின்ருர் வள்ளுவர். ஊழினேப் பற்றிக் கூறும் போது தான் முந்துறும் என்று காட்டிய வள்ளுவர், ஆள்வினை உடைமையைப் பற்றிக் கூறும் போது, அவ்வினை யுடைமை ஊழையும் உப்பக்கம் காணும் கிலேயினைத் தெளிவாகக் காட்டி விடு கின்ருர். தெய்வத்தான் ஆகாதனவும் ஆள்வினை யுடைமை யால் ஆகும் எனக் காட்டிய வள்ளுவர், அங்கே ஊழ்வினை வந்தால் என்னகும் என்ற விவிைனே எழுப்பி, அதற்குப் பதில் உரைப்பார் போன்று, ஊழையும் உப்பக்கம் காண்பர் உலவின்றித் தாழா துளுற்று பவர் ' என விளக்கங் காட்டு கின்ருர். 83