பக்கம்:நாலும் இரண்டும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலும் இரண்டும் எனவே, வள்ளுவர் கருத்து ஊழ்வினையிலும் ஆள்வினை யுடைமையே வலுவுடைத் தென்பதும், திண்ணிய ஆள்வினே யால் செயலாற்றும் எவரும் ஊழுக்கோ அதைச் செலுத்துவ தாகக் கருதும் தெய்வத்துக்கோ அஞ்ச வேண்டுவ தில்லை. யென்பதும், அவ்வாழ்வினை யுடையார்க்குத் தெய்வம் ஊழ் வினை நீக்கிச் செம்மை நலம் அருளும் என்பதும் தெளி வாகும். இந்த அடிப்படையில் ஆள்வினை, ஊழ்வினையை ஒட்ட வல்லது என்பதை உணர்ந்து, வள்ளுவர் குறளே வாழ்விடைக் கொள்ள விரும்பும் நாம் நம் செயலைச் செம்மையாகச் செய்து சிறப்புறுவோமாக. - - நல்ல உள்ளம் உலக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் மனித உள்ளமே. உள்ள நெகிழ்வும் உணர்வும்: பிற உயிர்களுக்கு இருப்பதாக அறிஞர்தம் ஆய்வுகள் ஓரளவு விளக்கினலும் அவற்றைச் செயலாற்றும் திறனும் நெறியும் அப்பிறவுயிர்களுக்குக் கிடையா. எனவே, மனித உள்ளமும் அதன் வழி அரும்பும் உணர்வுமே உலக நெறியை ஒருவழிப் படுத்துகின்றன என அறியலாம். உலகில் எத்தனையோ கோடி மக்கள் வாழ்கின்ருர் களே; அவர்தம் உள்ளம் அத்தனையும் எப்படி உலகை ஒருவழிப் படுத்த இயலும் என்ற ஐயம் எழலாம். ஆயினும் மக்கள் அனைவரும் அந்த உள்ள உணர்வைச் செயல்படுத்த, |கினேயா கிலேயும் கினைப்பினும் செயலாற்ற முடியாச் சூழலும் எங்கோ ஒருசில மக்களின் உணர்வுவழி உலகம் செல்லக். காரணமாகின்றன. அந்த ஒருசில உள்ளங்கள் நல்ல உள்ளங்களாக அமைந்துவிடின் நாடும் உலகமும் நன்மை 84