பக்கம்:நாலும் இரண்டும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல உள்ளம் பெற்றுச் சிறக்கும் அல்லாவிடின் என்குைம் எடுத்தியம்ப வேண்டாl - - இந்த உலகின் நல்லவழியினில் ஆற்றுப்படுத்தும் நல்ல உள்ளங்களை அன்று தொட்டுத் தமிழறிஞர் எண்ணிப் பார்த்துப் பார்த்து ஏட்டிலும் வடித்துச் சென்றுள்ளனர். உள்ளம் தூய்மையாக இருந்து அதன்வழியே செயலாற்று வதே எல்லா அறங்களுக்கும் மேம்பட்டதாகும் என்ற உண்மையை வள்ளுவர், மனத்துக்கண் மாசில தைல் அனைத் தறன் என்று வரையறுத் துள்ளன்ர். அப்படியே நல்ல செயல்கள் ஆற்று வதற்கான அடிப்படையான உள்ளம் மக்களுக்கு அமைய வேண்டும் என்ற உண்மையினையும் அவ்வுள்ளம் கிலே கெட்டு அல்லாதனவற்றை நினைக்கும் அவல நிலையினையும் வள்ளுவர் பலவிடங்களில் சுட்டிக் காட்டத் தவறவில்லை. உள்ளுவ தெல்லாம் உயர் வுள்ளல், உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல் என்பன அவர் வாக்குக ளன்ருே! * , • . - இந்த நல்ல உள்ளத்தை நாட்டில் எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது? இந்த வினவுககு விடையாக அன்று முதல் இன்று வரை எண்ணற்ற வகையில் விடை காட்டி வருகின் றனர் பலர். உலகமே அந்த நல்லுள்ளத்தாலும் அதன்வழி அரும்பும் சான்ருண்மையாலுமே வாழ்கின்றது என்ற உண்மையை வள்ளுவர் பல பாக்களில் காட்டுகின்ருர். இந்த நல்லுளத்தாரை எண்ணித்தான். ' எவ்வழி கல்லவர் ஆடவர் அவ்வழி கல்லை வாழிய நிலனே என்று பண்டைப் புலவர் பாரின்ே வாழ்த்துகின்ருர். 85