பக்கம்:நாலு பழங்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
நாலு பழங்கள்

அரசன், "சோதனையை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டான். அரசி, "ஆகா, ஆரம்பிக்கலாம்" என்றாள்.

அரசன் தன் மைத்துனனைப் பார்த்துப் பேசினான். "நேற்று இரவு நான் படுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பயல் வந்தான். என் மார்பில் உதைத்தான். என் மேல் எச்சில் உமிழ்ந்தான். என் காதைப் பிடித்துத் திருகினான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று கேட்டான்.

அரசியின் தம்பி, "இராத்திரி நடந்ததை இவ்வளவு நேரம் கழித்துச் சொல்கிறீர்களே! அப்பொழுதே உதைத்த அவன் காலை வெட்டியிருக்க வேண்டாமா? துப்பிய அவன் வாயைக் கிழித்துப் போட்டிருக்கலாமே! அவனுடைய கையைத் துண்டித்து விட்டல்லவா மறு காரியம் பார்த்திருக்க வேண்டும்?" என்று படபடப்பாகப் பேசினான்.

அவன் பேச்சைக் கேட்ட போது அரசன் சிரித்துக் கொண்டான். அரசிக்கோ கோபத்தால் கண்கள் சிவந்தன. அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அரசன் அவளைக் கையமர்த்திச் சும்மா இருக்கச் சொன்னான்.

பிறகு தன் மந்திரியாகிய முதியவரைப் பார்த்து அரசன், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான்.

"உங்களை உதைத்த காலுக்குத் தண்டையும் கொலுசும் பண்ணிப் போடுங்கள். காதைத் திருகிய கைக்குத் தங்கக்காப்புப் போடுங்கள், உமிழ்ந்த.