பக்கம்:நாவுக்கரசர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. காழிப் பிள்ளையாருடன் தோழமை

---*

.

திருநாவுக்கரசர் தில்லைச் சிற்றம்பலவனைப் போற்றி மகிழ்ந்திருக்கும் நாளில் சீகாழிப்பதியில் கவுணியப் பிள்ளையார் மூவாண்டில் உமையம்மையார் அளித்த ஞானப் பாலுண்டு திருஞான சம்பந்தராகி தோடுடைய செவியன்’ என்னும் தெய்வமணம் கமழும் திருநெறிய தமிழ்ப் பதிகம் பாடி, என் உள்ளம் கவர் கள்வன்... எம்மை இது செய்தபிரான் இவனன்றே எனத் தம் தந்தையாருக்குக் கைவிரலாற் சுட்டிக் காட்டிய அற்புத நிகழ்ச்சியை அடியார்கள்மூலம் கேள்வியுற்றவர் ஆளுடைய பிள்ளையாரைச் சேவிக்கவேண்டும் என்ற பேரவா அவர் மனத்திடையே எழுகின்றது.

தில்லைக்கூத்தனை வணங்கி விடைபெற்றுச் சீகாழியை நோக்கி வருபவர் திருநாரையூரை அடைகின்றார். இவ் வூரில் எழுந்தருளியிருக்கும் கயிலைமலை நாதனை இரண்டு பதிகங்களால் போற்றுகின்றார். “வீறுதானுடை’ (5.55) என்னும் முதற் குறிப்புடைய பதிகத்தில்,

1. காரையூர்(திருநாரையூர்) சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார் குடிக்குப் போகும் பேருந்து வழியில் 10 கல் தொலைவிலுள்ளது. நாரை வழிபட்ட தலம். நம்பி யாண்டார் நம்பி பிறந்த ஊர், இவ்வூர்ப் பொல்லாப் பிள்ளையார் தந்த குறிப்புப்படி திருமுறைகள் இருந்த இடம் கண்டு திரு முறைகளை முறைப்படுத்தித் தொகுத்

தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/112&oldid=634101" இலிருந்து மீள்விக்கப்பட்டது