பக்கம்:நாவுக்கரசர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாவுக்கரசர்

வேடு தங்கிய வேடமும் வெண்தலை ஓடு தங்கிய வண்பலி கொள்கையும் நாடு தங்கிய நாரையூ ரான் நடம் ஆடு பைங்கழல் அம்ம அழகிதே. (3) என்பது மூன்றாவது பாடல். ‘சொல்லானைப் பொருளானை’ (6.74) என்று தொடங்கும் தாண்டகப் பதிகத்தின்,

ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை

ஆலதன்கீழ் அறநால்வர்க் கருள்செய் தானைப் பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்

பைங்கரும்பாய் அங்கருந்துஞ் சுவையா னானை. மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி

வேள்வியினின் பயனாய விமலன் தன்னை நாலாய மறைக்கிறைவன் ஆயி னானை

நாரையூர் கன்னகரில் கண்டேன் நானே. (9) என்பது ஒன்பதாவது பாடல். இங்கனம் நாரையூர்ப் பெருமானை வழிபட்டுக்கொண்டு சீகாழிப் பதியைச் சென்று சேர்கின்றார். -

சூலை நோயினைத் தந்து கயிலையம் பெருமானால் நேரே ஆட்கொள்ளப்பெற்றுத் திருநாவுக்கரசரான பெருந் தகையார் சீகாழிப் பதியை நோக்கி வருகின்றார் என்ற செய்தி ஆளுடைய பிள்ளையாருக்கு எட்டுகின்றது. அவர்

2. காழி: விழுப்புரம்-கடலூர்.மயிலாடுதுறை இருப் பூர்தி வழியில் சீர்காழி என்ற நிலையத்திலிருந்து 1 க்ல் தொலைவு. ஞானசம்பந்தர் அவதரித்த தலம். இத்தலத் தில் கனநாத நாயனார் பயிற்சிக் கல்லூரி வைத்துத் தொண்டரை ஆக்கும் தொண்டு புரிந்தனர். பாடல்பெற்ற தலங்களில் இத்தலமே மிகுதியான பாடல்களைப் பெற் றுள்ளது. இத்தலத்திற்கு 12 பெயர்கள் உண்டு. அவை கழுமலம், காழி, கொச்சை வயம், சண்பை நகர், சிரபுரம், தோணிபுரம், பிரமபுரம், புகலி, புறவம், பூந்தராய், இவங்குரு, வேணுபுரம் இவற்றின் காரணங்கள் அருணாசல கவிராயர் இயற்றிய தலபுராணத்தில் தரப்பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/113&oldid=634102" இலிருந்து மீள்விக்கப்பட்டது