பக்கம்:நாவுக்கரசர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தோழமை 71

அடியார் கூட்டத்துடன் நாவுக்கரசரை எதிர்கொண் டழைக்கின்றார். திருஞான சம்பந்தரைக் கண்டு அளவிலா ஆர்வமுற்ற திருநாவுக்கரசரும் எதிர் சென்று அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார். ஆளுடைய பிள்ளையார் மலர் போன்ற மெல்லிய தம் திருக்கைகளால் பணிந்தவர் தம் கரங்கள் பற்றி இறைஞ்சி அப்பரே என்று அன்பினால் அழைக்க, அவரும் அடியேன்” என்கின்றார்.

இந்த இரு பெரும் அடியார்களின் சந்திப்பைப்ப்ற்றிப் பிற்காலத்தில் அடியார்களின் பெருமையை பெரிய புராண மாக விரித்தெழுதிய தொண்டர் சீர் பரப்பும் சேக்கிழார் பெருமான் மூன்று பாடல்களால் அற்புதமாகக் காட்டு ff.

அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா னங்கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக் கரசரெனச் சிறந்த சீர்த்தி எம்பெருமக் களும்இயைந்த கூட்டத்தில்

அரனடியார் இன்பம் எய்தி உம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகும் ஒலி கிறைந்தர்ர் உலகம் எல்லாம். ‘பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்’ என்

றரசுவப்பப் பெருகு ஞான வள்ளலார் வாகீசர் தமைவணங்கப்

பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க, உள்ளங்றை காதலினால் ஒருவரொரு

வரிற்கலந்த உண்மையோடும் வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார் கழல்வணங்கும் விருப்பம் மிக்கார். அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்

அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/114&oldid=634103" இலிருந்து மீள்விக்கப்பட்டது