பக்கம்:நாவுக்கரசர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாவுக்கரசர்

பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற

புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனம் உய்ய,

இருட்கடுவுண் டவர்.அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித்

தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று

செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே.8

என்ற திருப்பாடல்கள் நம்மையும் சிவம் பெருக்கும் சீலர் களாக்குவதைக் காணலாம். நாமும் உணர்ச்சியால் அக் காலத்திற்குத் தள்ளப் பெற்று நம்மை மறந்த நிலையை அடைகின்றோம்.

இரு வ ரு ம் தோணியப்பரை வணங்குகின்றனர். அப்போது ஆளுடைய பிள்ளையார் அப்பர் பெருமானை நோக்கி, உங்கள் தம்பிரானாரைப் பாடுவீராக’ என வேண்டுகின்றார். நாவுக்கரசரும் பெரிய பெருமாட்டியுடன் தோணிமீது வீற்றிருக்கும் பெருமானைப் பார் கொண்டு மூடி” (4.82) என்ற முதற் குறிப்புடைய திருவிருத்தம் பாடித் தோணிபுரத் தீசரைப் போற்றுகின்றார். இத்திருப் பதிகத்தின் நான்கு திருப்பாடல்களில் ஆழங்கால் படுவோம்.

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுகின் பாதமெல்லாம் காலஞ்சு புள்ளினம் ஏந்தின

என்பர் களிர்மதியம் கால்கொண்ட வண்கைச் சடைவிரித்

தாடும் கழுமலவர்க் காளன்றி மற்று முண்டோ

அக்தனாழி அகலிடமே. (1)

விரிக்கும் அரும்பதம் வேதங்கள்

ஒதும் விழுமியநூல்

3. பெ. பு. திருநாவுக், 183.185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/115&oldid=634104" இலிருந்து மீள்விக்கப்பட்டது