பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஆறிய தழும்பு ★ 49




நீண்ட கூந்தலைப் பிடித்து இழுத்து மேலே தூக்கிய அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்டு கண்ட நான் வாய்விட்டு, ‘ஆ! கோமதி! நீயா?’ என்று அலறியே விட்டேன். அவளுக்குக் கொஞ்சம் நினைவு இருந்தது. கண்ணைத் திறந்து என்னைப் பார்த்த அவளது வெளிறிய முகத்தில் ஆச்சரியம் நிழலிட்டது. ‘நீங்களா? இங்கே. எப்படி வந்தீர்கள்?’ என்று கேட்காமல் பார்வையின் சக்தியினால் கேட்டாள்.

நம் கண்களுக்குப் புலனாகாத சக்தி நம்மை ஆட்டிவைக்கிறது என்பது எவ்வளவு உண்மை! இல்லாவிட்டால் யானை வாயில் சென்ற கரும்பு போல் அருவி வாயில் சிக்கிய நாங்கள் இப்படி உயிர் பெற்றுப் பிழைத்து வந்திருப்போமா? ஆறிய தழும்பு தான் ஆனந்தத் தழும்பாக உருப் பெற்றிருக்குமா?

(கல்கி - மே 8, 1955)


நா.பா.1 –4