பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உனக்கு மட்டும் ★ 87




பழைய பூவரச மரத்தடியில்தான். அன்று மாதிரி இப்போதும் இருள்தான் என்னைச் சூழ்ந்திருக்கிறது.

என்னிடமிருந்து நீ திருடியது கொஞ்சம்தான். ஆறரை மணிநேரத்தையும், ஆறரை ரூபாயையும்தான் உன்னால் திருட முடிந்தது! பாலக்காட்டுக்காரர்தான் நிறையப் பறிகொடுத்தவர். அது அவர் தலையெழுத்து. பணத்தையும், நேரத்தையும் தவிர 'இன்னம் வேறு ஏதாவது நீ என்னிடமிருந்து திருடிக் கொண்டு போயிருந்தால் உடனே திருப்பி அனுப்பிவிடு. உனக்கு மட்டும் காதோடு இதைச் சொல்கிறேன்; “கட்டாயம் அதைத் திருப்பி அனுப்பிவிடு”

(கல்கி, 24.3.1957)