பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. காலத்துக்கு வணக்கம்

ன்றைய காலைத் தபாலில் ஒரே ஒரு கடிதந்தான் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். விக்கிரமசிங்க புரத்திலிருந்து வீரராகவன் எழுதியிருந்தான். வழக்கமான குசலப்பிரச்னத்துக்கு அப்புறம் கீழ்க்கண்ட விவரம் அதில் எழுதப்பட்டிருந்தது.

“வருகிற ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். நீங்களும் அம்மாவை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. கட்டாயம் நாலு நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வாருங்கள்.”

“இந்தா. உன்னைத்தானே? தூக்கமா? உன் பிள்ளையாண்டான் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து கடுதாசி எழுதியிருக்கிறான்.”

அடுக்களைக் காரியத்தை முடித்த அலுப்புடன் ரேழி வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த அவள் எழுந்திருந்தாள். “ஆடி அமாவாசைக்குப் பாணதீர்த்தம் போகிறார்களாம். உன்னையும், என்னையும் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருக்கிறான்.”

“நாம் அவசியம் அங்கே போகணும்”

“பாணதீர்த்தம் பார்க்க வேண்டியதுதான். அதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இராமேசுவரம், குற்றாலம், கொடைக்கானல், உதகமண்டலம் இந்த மாதிரி வேறு எங்கேயாவது போகலாமே? பாணதீர்த்தத்துக்கு எதற்கு? அங்கே போய்த் திரும்புவது ரொம்பக் கஷ்டம். வேண்டாம்”

“நானும் பார்த்துக் கொண்டே வருகிறேன். நான்கு வருஷங்களாக நீங்கள் இப்படித்தான் தட்டிக் கழிக்கிறீர்கள். 'பாணதீர்த்தம்’ என்ற பெயரை எடுத்தாலே, உங்கள் மனம் சம்மதிக்கிறதில்லை.”

“சரி, சரி, சண்டைக்குக் கிளம்பி விடாதே. போவதா வேண்டாமா என்று நாளைக்குள்ளே முடிவு செய்யலாம்.அப்புறம் வீரராகவனுக்குக் கடிதம் எழுதுவோம்” சொல்லி விட்டு என் அறையை நோக்கி நடந்தேன்.

பெட்டிக்குள் நாற்பது வருஷ காலம் நாள் தவறாமல் எழுதிய டைரிகள் குவிந்து கிடந்தன. அவை வெறும் டைரிகளா? அல்ல. எழுபதாவது வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு கிழவன் கடந்த காலத்தில் கண்ட அனுபவங்கள்.

டைரிகள் எல்லாவற்றையும் மேலும் கீழுமாகப் புரட்டிய போது 1929வது வருஷத்து டைரி மேலே வந்தது. உத்தியோக வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவை