பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / கொள்ளைக்காரன் . 637 மேஜர்புரத்துக் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆள் ஒருவன் ஆலப்புழையில் இருப்பதாக எனக்கு ஒர் இரகசியத் தகவல் கிடைத்தது. மலையாளத்திற்குப் போய் ஆலப்புழையில் மறைந்திருக்கும் குற்றவாளியை நாமே தேடப்போவதா?அல்லது இலாகாவிலுள்ள எபி.ஐ.டி.களில் யாரையாவது அனுப்பலாமா? இப்படி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் நானே ஆலப்புழைக்கு போய்ச் சேர வேண்டிய வேறு ஒர் அவசியம் ஏற்பட்டது. ஆலப்புழைக்கு அருகில் அம்பலப்புழை என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே எனக்கு ஒரு பழம்பெரும் நண்பர் உண்டு. அவர் எங்கள் இலாகாவில் பெரிய உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெற்றவர்.நாராயணமேனன் என்று பெயர்.ஆவணி மாத நடுவில் மலையாளத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒணம் பண்டிகை வருகிறதென்றும், அதற்கு நான் கட்டாயம் வந்து குறைந்த பட்சம் ஒரு வாரமாவது தன்னோடு தங்கிப் போக வேண்டுமென்றும் அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஏற்கனவே,பலமுறை அவருடைய அழைப்பை நிறைவேற்ற முடியாமல் தட்டிக் கழித்திருந்தேன்; இந்தத் தடவையும் அப்படிச் செய்வதற்கில்லை.கேஸ் விஷயமாகவும் அலைந்தாற் போலிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, செங்கோட்டை வழியாகத் திருவனந்தபுரம் போய், அங்கிருந்து மோட்டார் போட் மூலம் அம்பலப்புழை போய்ச் சேர்ந்தேன். என்னைக் கண்டதும் நாராயணமேனனுக்கு மகிழ்ச்சி நிலைகொள்ள வில்லை. “இல்லை! இல்லை! நான் கால்வாசிதான் உங்கள் விருந்தினராக ஒணம் பண்டிகைக்கு வந்திருக்கிறேன். முக்கால்வாசி என் உத்தியோக காரியமாகச் சில ஆட்களைத் தேடி வந்திருக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே அவருக்குப் பதில் சொன்னேன். வெகு நாட்களுக்குப் பின்பு ஏற்பட்ட அருமையான சந்திப்பால், பொழுது சிரித்தும் பேசியும் கழிந்து கொண்டிருந்தது. சாயங்காலம் ஆயிற்று. “இன்று இங்கே கிருஷ்ணன்கோவில் வாசலில், கதகளி, ஒட்டந்துள்ளல் முதலிய ஆட்டங்கள் சிலவற்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தக் கதகளி நாட்டியமும் ஒட்டந்துள்ளல் ஆட்டமும் எங்கள் கேரளத்துக்கே உரிய சிறப்பான கலைகள், ஸார். நீங்கள் வராதவர் வந்திருக்கிறீர்கள். இன்றிரவுதான் இப்படிக் கழியட்டுமே போய்ப் பார்க்கலாம், வாருங்கள் என்று அழைத்தார் நாராயணமேனன். நான் முதல் நாள் பிரயாணம் செய்துவந்த அலுப்பையும் பொருட்படுத்தாமல் கதகளி நாட்டியம் பார்க்கப் போவதற்கு இணங்கினேன். நானும் நண்பர் நாராயணமேனனும், இரவு ஏழரைமணி சுமாருக்கு அம்பலப்புழையிலுள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.கோவில் வாசலில்நாட்டியத்திற்காக, அலங்கரிக்கப்பெற்ற பந்தற்போட்டு அரங்கம் அமைத்திருந்தார்கள். நாட்டியம் ஆரம்பித்தது.புராண இதிகாசங்களிலிருந்து சில காட்சிகளை நாட்டியமாக ஆடிக்காட்டினார்கள். கதகளி நாட்டியத்தின் அமைப்பும், ஆடை