பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

638 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் அணிகளும், பாணிகளும் ஒருவிதமான கம்பீரத்துடன், பார்ப்பவர்கள் பிரமிக்கும்படி அமைந்திருந்தன. முகமூடி, வரிந்து வரிந்து அடுக்கடுக்காகக் குஞ்சங்கள் தொங்கும் ஆடை, அவற்றின் நுனியில் சிறுசிறு மணிகள்,கை,கால்களில் சலங்கைகள், இந்த அலங்காரத்தால் பூதம்போல் தோன்றும் சரீரம் இப்படிச் சிலர் வந்து மேடைமேல் ஆடிக் கதையைச் சித்தரித்துக் காட்டினார்கள்.வெண்கலத் தாம்பாளத்தில் தட்டுவது போன்ற ஒசை ஒன்று அடிக்கடி பின்னாலிருந்து இசைக்கப்பட்டது. வேகமாக ஒடித்துள்ளுகிற ஒட்டந்துள்ளல் ஆட்டமும் பார்க்க விறுவிறுப்பாக இருந்தது. நாட்டியம் முடியும்போது இரவு பத்தரை மணி."மேனன் சார்! கேரளத்தின் சிறப்புக்கு இந்த நாட்டியக் கலையும் ஒரு காரணந்தான். இரண்டு மணி நேரத்திற்குள் என் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டதே இந்தக் கலை! என்ன அருமையான ஆட்டம்' என்று பாராட்டினேன் நான். "ஆமாம்! கேசவ குரூப் ஆட்டம் என்றால், மனம் என்ன? சமயா சமயங்களில் எல்லாமே கொள்ளைபோய் விடும்” என்று அவர் கூறினார். “யாரைக் கேசவ குரூப்’ என்கிறீர்கள்? எனக்கொன்றும் புரியவில்லையே?” “அவன்தான் சார், இந்த நாட்டியக் கோஷ்டிக்குத் தலைவன். இன்றைக்கு 'முருமகஜனனம் நடந்தபோது சிவன்வேஷத்தில் மேடைமேல் பயங்கரமாகப் பாய்ந்து பாய்ந்து ஆடினான், பாருங்கள் அவன்தான் கேசவ குரூப்” “அவனுக்கென்ன? அவனிடம் ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தீர்களே?”நான் ஆவலோடு மேனனைக் கேட்டேன். “அதில்லை! இந்தப் பயல் சிறுவயதிலிருந்து எனக்குப் பழக்கமானவன். அற்புதமான கலைஞானம் இந்தக் கதகளியில் இவனுக்கு இருக்கிறது. இருந்தென்ன பிரயோஜனம் நடத்தை மோசம்” - “எந்த நடத்தையைச் சொல்கிறீர்கள்?” வேறொன்றுமில்லை; இந்த நாட்டியத்தை வைத்துக் கொண்டு இவனால் சம்பாதித்துப் பிழைக்க முடியவில்லை. இவனுடைய கோஷ்டிக்கு முழு வயிறு நிறைய இந்தக் கலை மட்டும் போதவில்லை. அதனால் நாட்டியமில்லாத இரவுகளில் கோஷ்டியாகத் திருடப் புறப்பட்டு விடுகிறான். அதுவும் அவன் திருட்டு எல்லாம் நூதன முறைகள்” என் சந்தேகம் வலுப்பட்டுவிட்டது. நான் மேலும் தொடர்ந்து நாராயண மேனனிடம் கேசவ குருப்பைப் பற்றியும் அவனுடைய கதகளி நடன கோஷ்டியைப் பற்றியும் பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். “ஒன்றரை மாதம் இரண்டு மாதத்துக்கு முன்னால், திடீரென்று, இவனும் இவன் கோஷ்டியாரும் நாட்டிய nஸன் டல்லாயிருந்தபோது, மாம்பழமும் பலாப்பழமும் விற்க ஆரம்பித்து விட்டார்கள். என் வீட்டுக்குக் கூடை நிறைய பழங்களோடு விற்பனைக்கு வந்து சேர்ந்தான் இவன். 'என்னடா, குரூப்! நீ எப்போது மாம்பழ