பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / கொள்ளைக்காரன் * 639 வியாபாரியானாய்? கதகளியும் ஒட்டந்துள்ளலும் என்ன ஆயிற்று? இதென்ன, விலைக்கு வாங்கி வந்து விற்கிற மாம்பழந்தானா? அல்லது.?” என்று கேட்டேன் நான். “சும்மாக் கேலி செய்யாதீங்க. போங்க..” என்று குழைந்தான் இவன்.எனக்குத் தெரிந்துவிட்டது.பயல் எவன் தோப்பிலோ சரியாகத் தேட்டைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறான் என்று அனுமானித்துக்கொண்டேன். கதகளி சான்ஸ் குறைந்த சமயங்களில், ரசிகர்களின் மனத்தைக் கொள்ளைகொண்டு ஆடுவதுபோலவே வேறு விதமான கொள்ளையில் ஈடுபட்டு விடுவான் இவன்!” நாராயணமேனன் கூறிக்கொண்டே இருந்தார். எனக்குக் கிடைக்கவேண்டிய குற்றவாளி சுலபமாகக் கிடைத்துவிட்டான்; நான் எல்லா விவரங்களையும் மேனனிடம் கூறினேன். அதோடு, கேசவ குரூப்பை அன்றிரவே கைது செய்து கொண்டுபோக ஏற்பாடு செய்யவேண்டும் என்றேன். “ஸார்! நானும் போலீஸ் இலாகாவில் இருந்தவன்தான். ஆனால், ஒரு வேண்டுகோள். இந்தக் கேசவ குரூப் செய்தது பெரிய கொள்ளைதான். தவிர மூன்றுபேர் இறக்கக் காரணமாகவும் இருந்திருக்கிறான். இவனைக் கைது செய்ய வேண்டியது அவசியம்தான். ஒணம் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக் கின்றன. தயவு செய்து அதுவரை வெளியே இருக்கட்டும். அல்லாமலும் ஒனத்தன்று இவனுக்குச் சில நாட்டிய புரோகிராம்கள் இருக்கின்றன. தான் மகிழ்வது பிறரை மகிழ்விப்பது என்பது எங்கள் ஒணத்தின் தத்துவம். நீங்கள் என் விருந்தினராக வந்த தோஷத்திற்காகவாவது இதற்கு இணங்க வேண்டும். ஒணம் முடிந்த மறுநாளே நான் கூட இருந்து உங்களுக்கு இவனைப் பிடித்துத் தருகிறேன்.” நாராயணமேனன் உருக்கமாக வேண்டிக்கொண்டார்.நானும் மறுக்க முடியாமல் இணங்கினேன். உடனே தென்காசியில் எங்கள் ஸ்டேஷனிலிருந்த ஏட்டு’க்கு ஒரு தந்தி கொடுத்தேன், “என் மேஜை டிராயரிலுள்ள சலங்கைக் கொத்தையெடுத்துக் கொண்டு நெல்லையப்பப் பிள்ளை, காவற்காரச் சிவனாண்டி இவர்களோடு நீ உடனே புறப்பட்டு வா” என்று. என் தந்தி கிடைத்ததுமே ஏட்டு முதலிய மூவரும் புறப்பட்டு திருவனந்தபுரம் மார்க்கமாக அம்பலப் புழைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மூவரும் என்னோடு நாராயணமேனனின் விருந்தாளியாகவே தங்கியிருந்தனர். ஒணத்தன்று இரவு முன்பு நடந்த அதே கிருஷ்ணன் கோவில் வாசலில், கேசவ குரூப் கோஷ்டியார் சிவபார்வதி நடனம் ஆட இருந்தார்கள். மணிபுரி, கதக், பரத நாட்டியம் இவைகளைக் காட்டிலும் கதையை விறு விறுப்பாக அமைத்துக் காட்டும்தன்மை கதகளிக்குப் பொருந்தியுள்ளது. அதனால்தான் கதைத் தொடர்பின்றிக் கதகளி சிறப்பதில்லை. நாராயணமேனனோடு நானும் நெல்லையப்பப் பிள்ளை, ஏட், சிவனாண்டி ஆகியோரும் அன்றிரவு சிவ பார்வதி நடனம் பார்க்கப் போயிருந்தோம். போகும் போதும் மாந்தோப்பில் அகப்பட்ட தடையமான சலங்கைக் கொத்தையும் எடுத்துச் சென்றிருந்தேன் நான். நாங்கள் அரங்கிற்கு முன் முதல் வரிசையில் வரிசையாக