பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

640 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள் உட்கார்ந்து கொண்டோம். வேண்டுமென்றே காவற்காரச் சிவனாண்டியை என் பக்கத்தில் உட்கார்த்தியிருந்தேன் நான். நாட்டியம் ஆரம்பமாயிற்று அதே வெண்கல ஒலி, தபேலே, சலங்கைகளின் ஒலி எல்லாம் கலந்து ஒலித்தன.முதல் முதலாக கேசவ குரூப்தான் சிவபெருமான் வேஷத்தில் பயங்கரமான தோற்றத்துடன் முழுவும் தீப்பந்தமும் ஏந்திக் கழுத்தில் நல்ல பாம்பு அணிந்து (விஷப்பல் பிடுங்கி பழக்கப்பட்டபாம்பு) ஒட்டந்துள்ளல் பாணியில் தாவித்தாவி மேடையதிர ஆவேசமாக ஆடினான். அவ்வளவுதான்! என் பக்கத்தில் இருந்த காவற்காரச்சிவனாண்டி"ஐயோ! இதே பூதம்தான்.விடாதீர்கள். பிடியுங்கள்.” என்று பயங்கரமாக அலறிக்கொண்டே எழுந்திருந்து விட்டான் எழுந்த வேகத்தில் மூர்ச்சையாகிப் பொத்தென்று கீழே விழுந்தான். இந்தச் சப்தத்தால் ஆட்டத்தை நிறுத்திவிட்ட கேசவ குரூப் மேடையிலிருந்து சிவனாண்டியையும் போலீஸ் உடையிலிருந்த ஏட்டை'யும் பார்த்துவிட்டான்.குபீரென்று விளக்குகள் அணைந்தன. கேசவ குரூப் ஒடத் தயாராகிவிட்டான். நானும் ஏட்டு’ம் மேடைமேல் பாய்ந்தோம். வேஷத்தை அவசர அவசரமாகக் கலைத்துக்கொண்டிருந்தான் குரூப். அவனைப் பிடித்துக் கைதுசெய்துவிட்டோம் கையில் விலங்கு மாட்டியபோது, கேசவ குரூப்பின் வலதுகையில் கட்டியிருந்த சலங்கையின் சரத்தைப் பார்த்தேன். அந்தச் சரத்தின் ஒரு பகுதி மூளியாகி இருந்தது. என்னிடமிருந்த, தோப்பில் கிடைத்த,சலங்கைக் கொத்தை அந்த மூளிப் பகுதியில் வைத்துப் பார்த்தேன்.அது சரியாகப் பொருந்தியது. இதற்குள் மேனனும் பிள்ளையுமாக சிவனாண்டியின் மூர்ச்சையைத் தெளிவித்திருந்தார்கள். கேசவ குரூப் கோஷ்டியைச் சேர்ந்த வேறு சிலரையும் கைது செய்தோம்.கோஷ்டியாக ஒரு லாரியில் சென்று நாலைந்து பேர் கதகளி வேடந்தரித்து, காவற்காரர்களை மருளச் செய்தபின், தோப்பில் புகுந்து கொள்ளையடித்து,லாரியிலேயே, காய் பழங்களுடன் மலையாளம் திரும்பிவிட்டதாக நடந்ததை மறுக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டான் கேசவ குரூப்."என்னய்யா? இவரு என் மனத்தையே கொள்ளை கொண்டு சிவபெருமான் மாதிரி ஆடினாரு இவரைப் போய் கைதுசெய்திருக்கீங்களே!” - என்றார் பிள்ளை. “மனத்தை மட்டுமல்ல; தோப்பைக் கொள்ளை கொண்டவனும் இவன்தான்” என்றேன் நான். மேனனுக்கு என்மேல் கொஞ்சம் வருத்தம். நிபந்தனைக்கு முன்பே 'குரூப் பைக் கைது செய்துவிட்டேன் என்று! (1963-க்கு முன்)