பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

642 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் "அப்படியானால் அந்தப் பழைய பெயருக்கு ஆதாரமான வரலாறு ஏதாவது இருந்தாக வேண்டும்.? ஒரு காரணமுமின்றி அந்த அம்மனுக்கு ‘உயிர் காத்த நல்லாள் என்ற பெயர் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?” இப்படி நான் மீண்டும் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியபோதுதான் பிள்ளையவர்களிடமிருந்து இந்தக் கதை' பிறந்தது.

  • * *

"பல தலைமுறைகளாக இங்கே இந்தப் பக்கத்தில் நிலவி வரும் ஒரு நம்பிக்கை உங்களுக்கும் தெரிந்ததுதானே? நம்மூர்க்காரர்களும் இங்கே கல்லணைக்கு மேலே மலையில் வேட்டையாடுவதற்காக வரும் வேட்டைக்காரர்களும் அந்த நம்பிக்கையை இன்றும் ஒரு கட்டுப்பாடான சம்பிரதாயமாகவே போற்றி மேற்கொண்டிருக். கிறார்கள். இங்கே முயல் முதல் பயங்கரமான வேங்கைப் புலிகள் வரை எதை வேட்டையாட வேண்டுமானாலும் மலையடிவாரத்திற்கும், ஆற்றங்கரையிலுள்ள இந்த அம்மன் கோவிலுக்கும் இடைப்பட்ட பிரதேசம் அம்மனின் ஆட்சி எல்லை. அம்மனின் ஆட்சி எல்லையில் சகல ஜீவ ஐந்துக்களும் அவள் காவலில் அடங்கியிருக்கின்றன. “அவள் காவலுக்கு உட்பட்ட பிரதேசத்தில் எந்த ஒரு சிறு உயிருக்கும் அழிவு வரக் கூடாது. அவ்வளவேன்? ரத்தக் குறியே காணக் கூடாது. அம்மன் துடியான தேவதை. கட்டுப்பாட்டை மீறியவர்களைத் தண்டிக்க வேண்டிய விதத்தில் தண்டிக்காமல் விடமாட்டாள் என்ற இந்த நம்பிக்கை அந்தக் காலத்தில் இப்போது இருப்பதைவிட இன்னும் பரிபூரணமான அளவில் இருந்தது. இப்போதும் அந்த நம்பிக்கை கெடவில்லை. ஆனாலும் கண்டும் காணாமலும் ஏதேதோ நடந்து விடுகிறது. ஆனாலும், அந்த நாட்களிலோ அவனவனுக்குத் தன் பயம் இருக்கும். இந்த மாதிரி விஷயங்களில் விளையாட்டாகக் கூட அவநம்பிக்கை ஏற்படாது. ஆனாலும், அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு முத்துவேலு நாயக்கன் இருக்கத்தான் இருந்தான். அடாததைச் செய்தான், படாததைப் பட்டான். அம்மனுடைய சக்தியே அதனாலேதான் வெளியாயிற்று” * "அந்த, முத்துவேலு நாயக்கன் அப்படி என்னதான் ஆகாத காரியத்தைச் செய்துவிட்டான்? அதனால் என்ன விளைந்துவிட்டது? சற்று விவரமாகத்தான் சொல்லுங்களேன் பிள்ளைவாள்!” என்றேன் நான். "அந்தக் கதையைத்தானே இப்போது நான் சொல்லத் தொடங்கினேன். நீங்கள் ஏன் இடையிலே இடையிலே மறித்துக் கேள்வி கேட்கிறீர்கள்? பேசாமல் கேட்டுக்கொண்டு வாருங்கள்.எல்லாம் நானாகவே விவரமாகச் சொல்லுவேன்”- இந்த மறுமொழியால் என் குறுக்குக் கேள்விகளை நிறுத்தி விட்டு, பிள்ளை மேலே தொடர்ந்து கூறலானார். . . . . * "நான் சொல்லுகிற இந்தச் சம்பவம் நடக்கும்போதுதான் சர்க்காரிலிருந்து செலவு செய்து அம்மன் கோவிலுக்கு வடக்கே மலையடிவாரத்தில் ஆற்றின் குறுக்கே அணை