பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ' உயிர் காத்த நல்லாள் * 643 வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அணைக்கட்டு வேலைக்காகப் பெரிய பெரிய என்ஜினியர்களெல்லாம் வந்து தங்கியிருந்தார்கள்.அணையில் வேலை செய்யும் கூலிகளுக்கு மேஸ்திரியாக நம்மூர் முத்துவேலு நாயக்கன்தான் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.மிகவும் சாத்வீகமாகத்தான் இருப்பான்.ஆனால் அவனைப் பிடித்த போதாத காலம் கையில் நாலு காசும், சந்தர்ப்பமும் சேர்ந்து கொண்டதும் ஆள் எதற்கும் துணியலாம் என்று எண்ணியோ என்னவோ, துணிந்து விட்டான், கட்டுப்பாட்டை மீற! என்ஜினியர்களை மேற்பார்வை செய்வதற்காக ஒரு வெள்ளைக்காரத் துரையும் வந்திருந்தான். அவன் பேர் ஜான் பீட்டர்’ என்றோ, என்னவோ சொல்லிக் கொண்டார்கள்.இந்த வெள்ளைக்காரத் துரையை உயிர் காத்த நல்லா’ளினும் உயர்ந்த தெய்வமாக மதிக்கத் தொடங்கியதால்தான் முத்துவேலு நாயக்கன் அந்தக் கதி”யை அடைந்தான். அந்தக் காலத்தில் ஆகாசத்திற்கும் பூமிக்குமாக அடர்ந்து படர்ந்த மூன்று பெரிய ஆலமரங்கள் கோவிலைச் சுற்றி இருந்தன. இவைகளுக்கு இடையே இருபது தப்படி நீள அகலமுள்ள இடுப்பளவுச் சுவரோடு கூடிய "காம்பவுண்டு"தான் அம்மனின் சந்நிதி. இந்த நான்கு புறத்துச்சுவர்களுக்கும் மேலே வெட்டவெளிதான். அதாவது கூரையோ, மேலடைப்போ கிடையாது. இதில் ஒரு விசேஷமென்ன வென்றால் மூன்று ஆலமரத்திலிருந்தும் மூன்று கிளைகள் பிரிந்து வந்து அம்மன் வீற்றிருந்த இடத்திற்கு நேர் மேலே கூடிப் பின்னியிருந்தன. மழை பெய்தாலோ, வெய்யில் உக்கிரமாகக் காய்ந்தாலோ, ஒரு பொட்டு மழைத் துளியோ, வெய்யிலோ,அம்மன்மேல் படமுடியாமல் இந்தக் கிளைகள் இணைந்து விமானம் போலக் கூடியிருந்தன.இதனை அம்மனின் தெய்வீக சக்தியால் விளைந்ததெனக் கருதி அந்தக் கிளைகள் கூடுமிடத்தில் மூன்று பெரிய வெண்கல மணிகளைக் கட்டியிருந்தார்கள்.இந்த மணிகளை அடிக்காமல் பூசை நடத்தக் கூடாது என்று ஒர் ஐதீகமும் இருந்து வந்தது. கோவில் காம்பவுண்டுச் சுவருக்கு நடுவில் பெரிய வாசல் உண்டு. ஆனால் அந்த வாசலுக்குக் கதவு, பூட்டு எதுவும் கிடையாது.

கோவிலின் சுற்றுப்புறத்தில் நாலுபக்கமும் ஏறக்குறைய ஒரு பர்லாங் துாரத்திற்கு அருகம்புல் தளதளவென்று வளர்ந்து காடாக மண்டிக் கிடக்கும். எப்போதும் இருப்பதைவிட ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து முடிந்திருப்பதனால் மார்கழி, தை மாதங்களில் இந்த அருகம்புல்வெளி கண் கொள்ளாக் காட்சியாகப் பச்சை மரகதத்தில் கம்பளம் செய்து பேர்த்தியது போல அற்புதமாக இருக்கும். பிராணிகள் தாமாகவந்துமேயலாமே தவிர இந்தப்புல்லை யாரும் அறுத்துக்கொண்டு போக மாட்டார்கள். ஊர் மாடுகளை இங்கே மேய்வதற்கு அனுப்பினாலோ, அவைகளில் சில தப்பித் தவறி மலையடிவாரத்துப் புதர்களுக்குப் போய்த் துஷ்ட மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டுவிடும். ஆகையால் ஊர்மாடுகளைத் தீவனவசதி குறைந்துபோன தட்டுமுட்டான காலத்தில் கூட இந்தப் பக்கம் மேய்க்கக் கொண்டுவர மாட்டார்கள். இதனால் மலையிலுள்ள மான்களுக்கு மட்டுமே இந்த