648 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் ஆனாலும் பாருங்கள் உயிர் காத்ததல்லாள் என்ற பேருக்கு ஏற்ப தான் காக்கும் உயிர்களைக் கொல்ல நினைத்த முத்துவேலு நாயக்கனுக்குக்கூட உயிர்ச் சேதம் ஏற்படுத்தி விடவில்லை அவள் வலது காலையும் கண்களையும் பறித்துக் கொண்டு அவனை உயிரோடு விட்டு விட்டாள். மறுநாள் பொங்கல் படையலும் அதுவுமாக இந்த முத்துவேலுப்பயல் லோகல்பண்டு ஆஸ்பத்திரியில் வலது முழங்காலுக்குக் கீழே ஆபரேஷன் செய்யப்பட்டுக் கண்களில் வெடிமருந்து பாய்ந்த எரிச்சல் தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். மேலே தூக்கி எறியப்பட்டதனால், உடலின் எல்லாப் பாகங்களிலும் காயங்கள் கை கால்களை அசைக்க முடியாமற் கிடந்தான். பீட்டர் துரை அவனுக்காக மதுரையிலிருந்து ஆபரேஷன் வேலையில் தேர்ச்சியுள்ள பெரிய டாக்டரை வரவழைத்திருந்தார். எல்லோரையும் போலப் பீட்டர்துரையும்,கரும்பும் வாழைத் தாருமாக அம்மனை வழிபட்டு மன்னிப்புப் பெறுவதற்காக முத்துவேலின் வேண்டுகோளுக் கிணங்கிக் கோவிலுக்கு வந்ததுதான் யாவரையும் அந்தத் தை மாதப் பிறப்பன்று ஆச்சரியத்தில் ஆழச்செய்தது: "அந்தக் குற்றத்திற்கு முத்துவேலு காரணமில்லை! எல்லாம் என்னாலே வந்த வினை! அதைப் பரிகாரப்படுத்திக் கொள்வதற்காகவே அவன் ஆஸ்பத்திரியில் கிடக்கும் இந்த நாளில் அவன் சார்பாகக் கிறிஸ்தவனாகிய நான்,உங்கள் கோவிலுக்கு வந்தேன்'என்று துரை கொச்சைத் தமிழில் கூறியபோது,யாவரும் மனமுருகிவிட்டனர். துரை அன்று நெற்றியில் விபூதி குங்குமம்கூட இட்டுக்கொண்டார். 来 米 米 ருவடியாபிள்ளை 'உயிர் காத்த நல்லாள் என்ற பெயரின் ஸ்தல புராணத்தை மேற்கண்டவாறு உதாரணக் கதையோடு எனக்குக் கூறி முடித்தபோது, உலாவச் சென்ற நாங்களிருவரும் மேற்படி அம்மன் கோவிலின் அருகே போய்ச் சேர்ந்தோம். திருவடியாபிள்ளை மேல் வேஷ்டியை அரையில் வரிந்து கட்டிக்கொண்டு, வாய்க்காலில் இறங்கிக் கைகால்களைச் சுத்தம் செய்துகொள்ளத் தொடங்கினார்.
- -07b! பிள்ளைவாள், உங்களுடைய இந்தக் கதைக்கு ஏதாவது அதாரிடி அதாவது ஆதாரம் உண்டா? இல்லை - வெறுமனே கர்ண பரம்பரையா
வருவதுதானா?-நான் கேட்டேன். - "அதென்ன அப்படிப் போனாப் போவுதுங்கறாப்பிலே ஒரு வார்த்தையைக் கேட்டிட்டியளே! இந்தத் திருவடியா பிள்ளை சொல்றதுலே எப்பவும் 'பாயிண்டு’ இல்லாமப் போவாதுங்க” என்றார் பிள்ளை. - "ஆமாம். ஆமாம் பாயிண்டு இருக்கத்தான் இருக்கிறது! நீங்கள் சொல்வதில் அது இல்லாமல் எங்கே போகும்”- சிரித்துக்கொண்டே நான் கூறினேன். (1963-க்கு முன்)