பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / அரண்டவன் கண்கள் : 651 கஷ்டத்தை இப்பொழுதும் மேற்கோளாக எடுத்துச் சொல்வார்கள் அப்போதுதான் கணவன் வீட்டிலிருந்து வயிறும் பிள்ளையுமாக வந்த முதலியார் மகள் அப்பா கொடுத்த மகிழம்பூவை விஷயம் தெரியாமல் வைத்துக்கொண்டாள். நிறைமாசம். பெண் குழந்தை பிறந்தது,வளர்ந்தது. இதோ இன்றைக்கு எட்டு வயசு தலையில் மயிரே முளைக்கவில்லை.வழுக்கை, இப்படியாகப் பல பல செய்திகள். 米 米 米 இருந்தும் முனியாண்டி தளரவில்லை.ஒப்புக்கொண்டு விட்டான்.முதலில் இந்தப் பந்தயம் போடவேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டது என்பதைக் காண்போம். சர்வ சாதாரணமாக ஆரம்பித்த தகராறு,பேச்சு முற்றிப் பந்தயமாக முடிந்துவிட்டது.ஊர்ச் சாவடியில், விடுமுறைக்காகப் பூந்துறை வந்திருந்த முனியாண்டி உட்கார்ந்து கொண்டிருந்தான். பல் விளக்கிக் கொண்டே அங்கே வந்து சேர்ந்தான் முத்தையா. அடுத்தாற்போல் செங்கப்படையன் வந்தான்.எதை எதையோ பேசினபின் பேச்சு பிலாவடியார் கோவிலில் வந்து நின்றது. பிலாவடியார் கோவில் மகிழ மரத்தின் பிரதாபங்களைச் செங்கப் படையன் ஒரேயடியாக அளந்தான். முத்தையா அதற்கு ஒத்துதினான்.பேச்சு வளர வளரச் சாவடியில் ஊர் விடலைப் பிள்ளைகள் நிறைந்து விட்டன. முனியாண்டி எல்லாம் சுத்தப் புரட்டு என்று சாதித்தான். “மோகினியாம்.! யட்சணியாம்! அந்தக் கதையெல்லாம் மூட்டை கட்டி வை! அப்பேன்,சும்மா உருட்டாதே. வேணும்னா வா அப்பேன். ஒரு பந்தயம் போட்டுவிடலாம்!” முனியாண்டி எகத்தாளமாகப் பேசிவிட்டான். "அப்படி வா தம்பி வழிக்கு. வர்ற அமாவாசை அன்னிக்கி இரவு புத்து மணிக்குப் புறப்பட்டுப் போய் அந்த மகிழ மரத்திலே நாங்க கொடுக்கிற ஆணியை அடிச்சுட்டு வந்துடு. ஆனா ஒண்ணு. நீ தனியாகத்தான் போகணும். போக வர ரெண்டு மணி நேரம் குடுத்திருக்கோம். இதெ நீ செஞ்சிட்டா இருபது ரூபா பந்தயம்! நான் பத்து, முத்தையாப் பய பத்து. பணம் போனாப் போவுது. எங்கே பார்க்கலாம்! உம். ஆம்பளை சிங்கத்தை...?” செங்கப்படையன் கொஞ்சம் அழுத்தமாகப் பேசினான். 'ஏன், இருக்கிற பேயி என்னைக்குந்தானே இருக்கும்? அதுக்கு அமாவாசை என்னத்துக்காம்? பேயடிக்காமப் புழைச்சுக்கிட்டாலும், இருட்லே பூச்சி பொட்டாவது கடிக்கட்டுமேன்னு பார்க்கிறீங்களா? அப்படித்தானே?” சிரித்துக் கொண்டே முனியாண்டி இதைக் கேட்டான். . "அப்ப ஒண்னு செய்! இருட்டுங்கறதுக்காக ஒரு பேட்ரி லைட் வச்சுக்க, அவ்வளவுதானே?'முத்தையன் அனுதாபப்பட்ட மாதிரி இதைச் சொல்லி வைத்தான். “நிறுத்து அண்ணே! ரொம்ப அளக்காதே! உம் பந்தயப் பணம் கெடக்குது விடு. அதுக்காக இதெ நான் செய்யறேன்னு நினைச்சிராதே.உங்க முட்டாள்தனத்துக்கு ஒரு பாடம் காட்டனும் அதுதான் என் நினைவு. இருட்டுக்குப் பயந்தவன் நான் இல்லெ. அமாவாசயானா என்ன பெளர்ணமியானா என்ன? துணிவு இருந்தா நடக்காது..? பயந்தானே இருட்டு' r . - .