பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி I அரண்டவன் கண்கள் : 653 கூடியிருந்த விடலைப் பிள்ளைகளுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. பட்டணத்தில் இருட்டையே கண்டறியாத முனியாண்டி எப்படி இந்த மைக்குழம்பிலே சிறிய பேட்டரியைத் துணைகொண்டு போக முடியும்? முனியாண்டியின் கேலிச் சிரிப்பு அவர்களுக்குத் தங்கள் நம்பிக்கை கரைவது போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. மணி பத்து! முனியாண்டி விடைபெற்றுக் கொண்டான், அதே புன்சிரிப்புடன். “முனி ஜாக்கிரதை காலையில் பொழுது விடிந்ததும் நாங்க வந்து பார்ப்போம். ஆணி குறித்த இடத்தில் அடிச்சிருக்கணும்! இங்கேயே சாவடியில் ஒரு மணிவரை காத்திருக்கோம். வந்திடு, பிறகுதான் வீட்டுக்குப் போவணும். என்னமோ? மனத்துலே தடம் புறண்டுச்சுன்னா திரும்பிடு! அதுக்காவ. எக்கச்சக்கமா மாட்டிக்கிடாதே! ஏதோ விளையாட்டுப் பந்தயம்: உசிருக்கு வினையாயிடப்படாது.” முத்தையாவின் குரலில் இப்போது இரக்கந்தோய்ந்திருந்தது.முனியாண்டி"என்ன அண்ணே மிரட்றே சரியா பதினொன்றரைக்குப் பாத்துக்குவே ஆளை வர்ரேன்” என்று கூறிவிட்டு இருளோடு ஐக்கியமானான். முனியாண்டி போகிற போக்கில் மீண்டும் கேலியாகச் சிரித்த சிரிப்பு செங்கப்படையனை ஏதோ செய்தது. நண்பர்கள் சீட்டுக்கட்டைப் பிரித்துக்கொண்டு சாவடியில் உட்கார்ந்தனர். ஆனால் ஆட்டம் ஒடவில்லை இந்நேரம் முனியாண்டி எங்கே இருப்பான்? என்ன செய்வான்? என்ற பேச்சிலேயே மணி பதினொன்றாகி விட்டது. முனியாண்டிக்குத் தனி நடை ரொம்ப வேகமாக ஒடும். எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே மகிழ மரத்தை அடைந்து விட்டான். சுற்றி ஒருமுறை நன்றாக பாட்டரி அடித்துப் பார்த்துக்கொண்டான். சோ என்று விழும் அருவி ஓசை சிள்வண்டுகளின் கீஇஇ சப்தம், வேறு ஒன்றுமே ஒலியில்லை. காற்றில் சில முதிர்ந்த இலைகள் உதிர்ந்தன. சில படபடத்தன. மரத்தையும் அதன் அமைப்பையும் லைட் அடித்து மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொண்டான். செங்கப்படையனை நினைத்தபோது அவனது அப்பாவி நம்பிக்கையும் நினைவுக்கு வந்தது. முனியாண்டி தனக்குள் சிரித்துக் கொண்டான். திடீரென்று அவனுக்கு ஒரு நல்ல பிளான் தோன்றியது. இருட்டில் மரத்தில் ஏறி ஆணி அடிப்பதைவிட மரத்தில் வெளிச்சம் படும்படி பாட்டரியை சாய்வாக வைத்து ஸ்விட்சையும் போட்டுவிட்டு ஏறினால் என்ன? யாரோ அடுப்புக் கல்லாகக் கூட்டி வைத்திருந்த இரண்டு குண்டுக் கற்களுக்கிடையில் பாட்டரியைச் சாய்வாகச் சார்த்தி வைத்துப் பார்த்தான். அவன் ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் ஸ்பஷ்டமாக வெளிச்சம் விழுந்தது. தனது பிளானை நினைத்துத் தானே மகிழ்ந்து கொண்டான். தரையிலிருந்து சாய்வாக வைக்கப்பட்டபாட்டரி எரிந்து கொண்டிருந்தது.அதன் வட்டவடிவமான ஒளி விரிவு மரத்தின் குறிப்பிட்ட கிளையில் போதுமான அளவு விழுந்தது. முனியாண்டி அரை வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டுமரத்தில் ஏற ஆயத்தமானான்சுத்தியலை மடியில் சொருகிக் கொண்டான். ஆணியைச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான்.சுற்றும் முற்றும் ஒருமுறை கண்ணோட்டம் விட்டுவிட்டு மரத்தில் ஏறினான். மூன்று கிளைகள் பிரியும் மரத்தின் நடு மையமான ஒரிடம் அவன் ஆணி அடிக்க