பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

654 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள் வேண்டியதாகும். அந்த இடம் நிற்க வசதியற்றுக் கப்பும், கவருமாக மண்டி அடர்ந்திருந்தது.எப்படியோ சமாளித்துக்கொண்டு ஏறி அதே இடத்திற்கு வந்து விட்டான். அப்போது பாட்டரி அதற்கு வெளிச்சத்தின் மூலம் நல்ல உதவி செய்தது.பையிலிருந்து ஆணியை எடுத்தான். காரியம் முடியப் போகிறது என்ற சந்தோஷத்தில் இதயம் வெகுவேகமாக அடித்துக் கொண்டது. டக்டக்டக். ஒன்று இரண்டு மூன்று ஆணியை இறுக அடித்தாகிவிட்டது. பச்சை மரம், ஆணி உள்ளிறங்கக் கேட்கவா வேண்டும்? சட்டை நுனி சிக்கிக் கொண்டிருந்ததை எடுப்பதற்காகச் சுத்தியலைத் தலைக்கு நேரே கவட்டை போலிருந்த இரண்டு கவடுகளுக்கிடையில் தொங்கவிட்டான்.சிக்கலை எடுத்தாகிவிட்டது. இதயம் அளவுகடந்த வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. அந்த வேகத்தில் சுத்தியலைத் தொங்கவிட்டதை அவன் மறந்துவிட்டான். இறங்குவதற்காக அடுத்த கொப்பில் காலை வைத்தான். ‘பரட்' வேஷ்டி கிழிந்தது. பின்னாலிருந்து யாரோ பிடித்து இழுப்பதுபோன்ற உணர்ச்சி. பட்டென்று மண்டையில் ஒரு அடிசுத்தியல் குறி பார்த்து வைத்தாற்போல் மண்டையில் விழுந்தது. அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி. பக்கத்துப் பலாமரத்துப் பொந்திலிருந்து கோட்டான் ஒன்று கிரீச்சிட்டது. அதே சமயம் மரத்திலிருந்து நேராக விழுந்த மகிழங்கொட்டை ஒன்று சொல்லிக் கொண்டே விழுந்தாற்போலப் பாட்டரியின் அமுக்கு ஸ்விட்சின் மேல் விழுந்தது. விளக்கு அணைந்துவிட்டது. சிறு கொட்டையானாலும் உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சியால் கல் விலகிவிட்டது. லைட் கீழே உருண்டது. எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டன. முனியாண்டி பிணமாகத் தொங்கினான். காரியத்தை வெற்றிகரமாக முடிக்கப் போகிறோம் என்ற பயமில்லாத சந்தோஷத்தில் தன்னை மறந்திருந்த முனியாண்டி ஆணி அடிக்கும்போது முன்தானையாகத் தொங்கிக் கொண்டிருந்த தன் வேஷ்டியையும் வைத்து நன்றாக இறுக்கி அடித்திருந்தான். கீழே இறங்கத் திரும்பும்போது பின்னே பிடித்திழுத்ததும் அவன் மரத்தோடு வைத்து அடித்திருந்த வேஷ்டி முன்தானையே. ஏதேதோ நண்பர்கள் சொன்னதெல்லாம் கண்முன்வந்தன. கண் அரண்டு விட்டது! கோட்டான் கத்தியதும் சுத்தியல் மண்டையில் விழுந்ததும், பாட்டரி அணைந்து உருண்டதும் ஒரே சமயத்தில் நடந்துவிட்டன. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக அத்தனை சம்பவங்களும் ஒன்றுகூடி அவனுக்கு ஏதோ ஒரு பயங்கர உருவத்தை முன் நிறுத்திவிட்டன. அத்தனை நேரம் இருந்த அசட்டுத் துணிவு ஒடிவிட்டது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே. திடீர் அதிர்ச்சியில் மூச்சு நின்றுவிட்டது. முன்தானைப் பிடிப்பும் மரக்கிளையின் அடர்த்தியும் அவனை அப்படியே தாங்கிக் கொண்டன. முனியாண்டியின் உயிரற்ற சடலம் மகிழ மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. உருண்டு போன பாட்டரி கல்லிலும் கட்டியிலும் அடிபட்டுக் கண்ணாடி உடைந்து போய் ஓர் மூலையில் பாறை இடுக்கில் தடுக்கப்பட்டுக் கிடந்தது. கீழே விழுந்த சுத்தியல் மரத்தடியிலிருந்த பிள்ளையாரின்