பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ! தீமிதி : 659 விடலைத்தனத்தோடு கூடப் பிறந்த மற்றோர் குணம் முன்யோசனையில்லாமை. எதிலும் உணர்ச்சி மயமாக, ஆழ்ந்த சிந்தனையின்றிப் பலாபலன்களைப்பற்றி எண்ணாமல் இறங்கிவிடும் பருவம் அது. இராஜகோபாலுக்கு அந்தக் காரியத்தை எப்படியும் செய்து காட்டிவிட வேண்டும் என்று ஒரு பிடிவாதம் ஏற்பட்டிருந்தது. அதைச் செய்வதனால் தான் அடையப் போகிற நன்மை என்ன? ஊரில் நான்கு பேரை விரோதித்துக் கொள்கிறோமே? என்றெல்லாம் அவன் தயங்கவே இல்லை. துரோபதை அம்மன் கோவில் வாசலில் இருந்த தீக்குழி போலவே, இராஜகோபால் பொக்கிஷதாராக அங்கம் வகித்து வந்த பகுத்தறிவாளர் படிப்பகத்தின் வாசலில் ஒரு தீக்குழி வெட்டப்பட்டுத் தயாராக இருந்தது. தன்னைப் போலவே "சீர்திருத்த நோக்கமும் பகுத்தறிவும் உள்ள விடலைப் பிள்ளைகளாக ஒரு பத்துப் பன்னிரண்டு வாலிபர்களைத் தீ மிதிப்பதற்கும் தயார் செய்துவிட்டான் இராஜகோபால், “அடே, தம்பிகளா!இதில் அருள், ஆவேசம், ஒரு கழுதையும் கிடையாது. தீக்குழியிலே வேகமாக இறங்கிப் பாதத்தையும் வேகமாகப் பெயர்த்து வைத்துக் கரையேறினால்,எவனுக்கும் தி உறைக்காது,கொப்புளம் உண்டாகாது. அதுதான் இதிலே உள்ள சூrமம்.இந்த இரகசியத்தை அறிந்த பெரியவங்கதுரோபதை அம்மன் பேரைச் சொல்லி ஆடி,ஏமாத்திக் கொண்டிருக்காங்க.அதை நீங்க அம்பலமாக்கி விடனும்” என்று தன் குழுவினருக்கு உபதேசம் செய்திருந்தான் அவன். அந்த உபதேசத்தைக் கேட்டபோது, “ஏண்டா ராசகோவாலு எனக்கு ஒரு சந்தேகம்டா. நம்ப தீக்குழியையும், அம்மன் கோயில் தீக்குழியைப் போலத்தானே வெட்டியிருக்கோம்? அம்மன் தீக்குழி பன்னிரண்டுகெஜ அகலமும் ஆறு கெஜநீளமும் அளவு. இதுவும் அப்படித்தான். என்னதான் 'குடுகுடு'வென்று ஓடினால்கூடப் பாதத்திலே தீ உறைக்குமே? நீ உறைக்காது என்கிறாயே” என்று சந்தேகத்தைக் கிளப்பினான் புத்தி கூர்மையுள்ள ஒரு வாலிபன். "நீ ரொம்ப கண்டவன். போடா பயந்தாங்கொள்ளிப் பயலே துணிஞ்சிடனும் துணிஞ்சாத்தாண்டா இதெல்லாம் நிரூபித்துக் காட்ட முடியும் முன் வச்ச காலைப் பின் வைக்கப்படாது.” . . . . . . “என்னதான் துணிஞ்சாலும் எனக்கென்னமோ பயமாத்தான் இருக்குது' “முட்டாள்! நீ குறள் படிச்சிருக்கியே: 'எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு படிச்சு என்னடா பிரயோசனம்” "அதே குறள்தானே அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்றும் கூறியிருக்குது?” கேள்வி கேட்டவன் படீரென்று மற்றோர் குறளைக் கூறினான். . . . . . . "சீ போடா! எதுக்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்றான். சொன்னால் கேட்கணும். கட்டுத் திட்டமா ஒரு காரியத்திலே இறங்கிட்டா,கடைசிவரை கொண்டு