பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ! தீமிதி * 663 செய்தான். அவ்வளவுதான். கூட்டத்தில் ஆகாயம் இடிந்து விழுகிறாற் போலச் சிரிப்பொலியும் கைதட்டலும் எழுந்தன. இராஜகோபாலுக்கு அங்கேயே அப்போதே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல்ன்றியது ஆறுமுகப் பெருமாள் மேலும் சுப்பையா மேலும் அவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், அவர்கள் இருவரும் அப்போது அங்கில்லாமற் போகவே அந்த ஆத்திரம் முழுவதும் கூட்டத்தின் மேலே திரும்பியது. “என்னப்பா இராஜகோபால் சிறு பிள்ளைகளை நம்பிப் பெரிய காரியத்திலே இறங்கி, இப்படிச் சந்தி சிரிக்க வச்சுட்டியே” என்று தலைவர் வேறு முகத்தைச் சுளித்தார். அப்போது "அண்ணே தலைவரையும் உங்களையும் லிஸ்டுலே சேர்த்திட்டா அந்த ரெண்டுபேரு இடமும் நிறைஞ்சுபோகும்.அப்படிச் செஞ்சிட்டா என்ன?” என்று சம்புலிங்கம் காதருகில் இரகசியமாக ஒரு போடு போட்டான். அது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரி இருந்தது இராஜகோபாலுக்கு. "சீ கழுதை யோசனையும் நீயும் நாசமாப் போக." என்று சம்புலிங்கத்தை நோக்கிக் கத்தினான். அது மைக் வழியாக ஒலிபெருக்கியில் கேட்டு விடவே, கூட்டத்தில் முன்னைவிடப் பெரிய சிரிப்பொலி உண்டாயிற்று. கை தட்டலும், சீழ்க்கை ஒலிகளும், ஏளனப் பேச்சுக்களும், குத்திக் காட்டும் இடித்துரைகளும் கூட்டத்திலிருந்து கிளம்பின. இராஜகோபாலின் தன்மானமோ, அல்லது கையாலாகாத சமயத்தில் இயல்பாகத் தோன்றுமே ஆத்திரம் அதுவோ, பீறிட்டு எழுந்தது. “சிரிக்காதீர்கள்! ஏன் சிரிக்கிறீர்கள்? எதற்காகக் கை தட்டுகிறீர்கள்? எங்களுக்குத் தன்மானம் உண்டு. சொன்னபடிசெய்து காட்டுவோம். இதோ ஆறுமுகப் பெருமாளுக்குப்பதிலாக நானே தீக்குழி இறங்குகின்றேன். எனக்கு அடுத்தாற்போல சுப்பையாவுக்குப் பதிலாகச் சம்புலிங்கம் இறங்குவார்.அதன்பின் நிகழ்ச்சிநிரலில் கண்டபடிமற்றப்பத்துப்பேரும் வரிசையாக இறங்குவார்கள்.” என்று வெறி கொண்டு மைக்கில் கத்தினான் அவன். அந்தச் சப்தமும் கூட்டத்தில் ஒரளவு அமைதியை உண்டாக்கத்தான் செய்தது. வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு மேடையிலிருந்து கீழே குதித்துத் தீக் குழியை நோக்கி நடந்தான் இராஜகோபால். பேசுவது எதைப் பற்றியும், எப்போதும் சுலபம்! செயலில் இறங்கும்போதுதான் மலைப்புத் தோன்றுகிறது. முதலில் போட்டிருந்த திட்டப்படி போட்டித் தீ மிதிப்பு’க்குக் கன்வீனர் என்ற ஹோதாவில் இராஜகோபாலும் சம்புலிங்கமும் இருந்தார்களே யொழியத் தீயிறங்குகிற பட்டியலில் தங்கள் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை. .. . . இப்போதோ நிலைமை மாறிவிட்டது. பன்னிரண்டு கெஜ நீளமும், શறு கெஜ அகலமுமாகக் கனிந்து விளங்கும் நெருப்புப் பரப்பில் இரண்டரை நிமிஷ நேரம் நடக்க