682
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
311.62 கார் செலவு மொத்தம் ரூ.472 - விவரம் வருமாறு:
1. | டிரைவர் சம்பளம் (அண்டு) பேட்டா | ரூ.180 |
2. | பெட்ரோல் + ஆயில் | ரூ.110 |
3. | முன்பக்க டயர் டியூப் - புதியதுவாங்கின வகையில் | ரூ. 21 |
4. | இண்டிகேடர் லைட் பழுது பார்த்ததற்காக | ரூ. 15 |
5. | கார்புரேட்டரும் ஜெட் புதியது மற்றும்சில்லறைச் செலவுகள் | ரூ.146 |
மொத்தம் | ரூ.472 |
2.2.1962 கார் அவஸ்தை - கட்டுக்கடங்காத செலவு - சனியன் மொத்தம் ரூ. 515
1. | டிரைவர் சம்பளம் (அண்டு) பேட்டா | ரூ.180 |
2. | பெட்ரோல் பங்க்... பில் | ரூ.120 |
3. | முன்பக்க டயர் தேய்ந்திருந்ததனால் ரீட்ரேட் செய்ய | ரூ. 80 |
4. | ஹெட்லைட் தகராறு | ரூ. 25 |
5. | ஸைலன்ஸர் 'நாய்ஸ்’ | ரூ. 85 |
6. | ரேடியேட்டர் கோளாறு ஃபேன் பெல்ட் புதியது - ஹாரன் தொல்லை | ரூ. 25 |
மொத்தம் - | ரூ.515 |
கட்டுக்கடங்காத இந்தச் செலவுகளின் காரணமாக வேறு எதிலாவது சிக்கனமாயிருக்க வேண்டுமென்று தவித்துத் தடுமாறி, இராப்பகலாகத் தூக்கமிழந்து, அப்படியே தூங்கினாலும் சொப்பனங்களில் கூட ‘ஸைலன்ஸ் பைப்பு டிரபிள்…!’, ‘ரேடியேட்டர் தகராறு...’, ‘டைனமோ சார்ஜ் ஆகவில்லை…’ என்று இந்த மாதிரிச் சொப்பனங்களாகவே கண்டு, அலறியடித்து எழுந்திருப்பது வழக்கமாகியிருந்தது எத்திராஜுலுவுக்கு.
எத்திராஜுலு அவர்கள் இப்படிப்பட்ட நிலையில் டிரைவர் சம்பளமாகிய ரூ.180 ஆவது மாதா மாதம் மீதப்பட்டால் நல்லதென்று கருதியவராக, அதை டிரைவர் முனியப்பனிடம் எப்படிச் சொல்வதென்று சொல்லத் தயங்கினார். அந்தச் சமயத்தில் ‘நுணலும் தன் வாயாற் கெடும்’ என்பது போல் முனியப்பனே அவரிடம் அதைப் பற்றி ஆரம்பித்தான். -
‘நீ இன்னா சார்… உடம்புக்கு முடியலேன்னாலும் வண்டியை எடுன்னு... கஸ்டப்படுத்துறே... ஏங்கல்… தாங்கல்லே நா வராமப் பூட்டாலும் ஒரு நா ரெண்டு நா…