பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/சிவானந்தம் ஒரு ‘ஜீனியஸ்’ 🞸 685

வைக்கோல் போர் வண்டி ஒன்றிலிருந்து காரை விலக்குவதற்காக ‘ஸ்டியரிங்கை’ இந்தப் பக்கம் சுற்றுவதற்குப் பதில் அந்தப் பக்கமே சுற்றி அதன் விளைவாய் எத்திராஜுலு அவர்களும், அவர்களுடைய காரும், ‘டிரைவிங்’ குரு முனியப்பனுமாகச் சேர்ந்து ஒரு பெரிய பள்ளத்தில் இறங்க நேர்ந்தது. நல்லவேளையாக வண்டிக்கும் ஒன்றும் சேதமில்லை. அதிலிருந்த ஆட்களுக்கும் சேதமில்லை. பள்ளத்தில் இறங்கிய அதிர்ச்சியில் வண்டி தானாகவே ஆஃப் ஆகிவிட்டது. எப்படியோ அரும் பாடு பட்டு வண்டியைப் பள்ளத்திலிருந்து மெயின் ரோட்டுக்குத் தள்ளிக் கொண்டு வந்து வீட்டுக்குப் பத்திரமாகத் திரும்ப முடிந்தது ஆண்டவன் புண்ணியம்தான். ‘இப்போது உங்கள் மோட்டாரை நீங்களே ஒட்டலாம்’ என்ற புத்தகம் புரொபஸருக்கு பால பாடமாகியிருந்தது.

பின்பொரு நாள் காரின் எதிரே நகராமல் குறுக்கே வந்து நின்ற எருமை மாடு ஒன்றைக் கண்டு காலால் ‘பிரேக்’கை மிதிப்பதற்குப் பதிலாகப் பதற்றத்தில் எத்திராஜுலு அவர்கள் ‘ஆக்ஸிலேட்டரை’ப் பலங்கொண்ட மட்டும் மிதித்து வைக்கவே வண்டி சீறிப் பாய்ந்து பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டது. அடிபட்ட எருமை மாடு சாகவில்லையானாலும் மாட்டுக்காரன் புரொபஸர் எத்திராஜுலுவையும் அவருடைய காரையும் சுற்றிக் கூட்டம் கூட்டிச் சந்தி சிரிக்கப் பண்ணி ரூ.200 வாங்கிவிட்டான். இது நிகழ்ந்தபோது எத்திராஜுலுவே ‘சுயசாரத்யம்’ செய்யத் தொடங்கியிருந்தார்.

எத்திராஜுலு இரண்டு மாதங்களாக முயன்று பழகியும் ‘டிரைவிங்’ அவருக்கு வரவில்லை. கீழ்க்கண்ட மாதிரிச் செலவுகள்தான் நாள் தவறாமல் வந்தன. 1. கருணாகர முதலித் தெருத் திருப்பத்தில் MSY 0832 ‘பியட்’டில் இடித்ததற்காக

அந்தக் கார்க்காரருக்குக் கொடுத்துச் சரிக்கட்டிய வகையில் ரூ.150.00

2. மெயின்ரோட்டில் குறுக்கே வந்து மாட்டிக் கொண்டு வதைத்த எருமை

மாட்டிற்கு. ரூ. 200.00

3. தெருமுனையில் வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் மோதியதற்கு நஷ்டஈடு.ரூ.100.00

எத்திராஜுலு இப்படி செலவுகளைக் கண்டு ஸெல்ஃப் டிரைவிங் தேவையில்லை என்று கைவிட்டதோடு அமையாமல் ‘ஸெல்ப் டிரைவிங்’ தொந்திரவினால் ஆகிய செலவைவிட ‘டிரைவருக்கு’ ரூ. 180 கொடுத்துத் தொலைப்பதே மேல் என்று மறுபடியும் முனியப்பனை வைத்துக் கொண்டார். காரில் இருந்த ‘எல்’போர்டுகளைக் கழற்றிவிட்டாலும் அந்தக் கார் என்கிற அவஸ்தை தினசரி தமக்கு எதையோ பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது போல்தான் அவருக்குத் தோன்றியது. அவருடைய சம்பளத்தில் சராசரி மாதா மாதம் ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல் விழுங்கிக் கொண்டிருந்தது அந்தப் பழைய கார்.

“செலவு இப்படியே ஆகிக் கொண்டிருந்தால் அந்தக் காருக்கு மாட்டி வச்சிருந்தீங்களே ‘எல்’போர்டு அதை எடுத்து நீங்களும், நானுமே ஆளுக்கு ஒண்ணு மாட்டிக்கலாம்” என்று அவருடைய மனைவியே ஒருநாள் அவரை வயிற்றெரிச்ச