நா. பார்த்தசாரதி 121
உரைக்கவும் முடிகிற விவரம் தெரிந்த அரசியல் தலைவர் கள் கூட ஆட்சிக்குப் போய்ப் பதவியில் உட்கார்ந்துவிட் டால் நல்லது கெட்டது புரியாதவர்களாகவும் தெரியாத வர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
ஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் தெரியாதது போல் கட்சி அரசியல் மூலமாகப் பதவியில் இருப்பவன் யாரோ அவனுக்குப் பொது நியாயங்கள் எவையுமே பிடி படாமல் போய்விடுகின்றன. இந்தியாவில் கட்சி அரசியலில் இருக்கிறவரை ஒவ்வொருவருக்கும் இந்த வகை ஜலதோஷம்
இருந்தே தொலைகிறது. . .
அப்போது முத்துராமலிங்கமும் சின்னியும் கவனித்துக் கொண்டிருக்கும் போதே போலீசார் அந்த அமைதியான கூட்டத்தின் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். - . . . . . .
கூட்ட்ம், தடியடி, கண்ணிர்ப் 4955 ತಿಕಕ மூலம் கலைக்கப்பட்டது, மந்திரியின் காரைக் கொளுத்துவதற்குத் தூண்டியதாகவும் முயன்றதாகவும் தியாகி சிவகாமிநாதன், அவர் மகள், மகன் மூவரும் கைது செய்யப் பெற்றுப் பேர்வீஸ் வாரியில் கூட்டிக் கொண்டு போகப் பட்டிருந் தார்கள். . . -
கூட்டத்துக்கும் போலீஸாருக்கும் மோதல் ةTسپتاميش போது கூட்டத்தாரோடு கலந்து கொள்ளத் துறுதுறுத்த முத்துராமலிங்கத்தைச் சின்னி தடுத்து நிறுத்தியிருந்தான்.
'பொழைப்புக்கு வேலை தேடிக்கிட்டிருக்கிற நீ அடிக்கடி ஜெயிலுக்குள்ளாரப் போயிட்டாக் கெடைக்கிற வேலையும் எகிறிப்பூடும்'- . . . . "
"அதுக்காகக் கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் போர்த்துக் கிட்டுச் சும்மாநிக்க முடியாது'
'இன்னிக்கு நாட்டுல நடக்கிற இது மாதிரி ஆக்கிர மங்களைத் தடுத்து நிறுத்திட எந்தத் தனி ஆளாலேயும்
முடியும்னு தோனலை தம்பி: