உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 127

தற்காலிகமான பதற்றமும் ஏற்பட்டது. சின்னி விடவில்லை. உடனே ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு வந்து ஒர் ஆட்டோரிக்ஷா பிடித்து இருவருமாக பாபுராஜ் அவுட்டோர் யூனிட் போயிருந்த காந்தி மண்ட பத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். .

அவர்கள் போய்ச் சேர்ந்திருந்தபோது காந்தி மண்டபப் புல் வெளியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

'சொன்னாச் சொன்ன நேரத்துக்கு வரணும்! நீ

என்னாப்பா ஆளு:’’ என்று பாபுராஜ் ஒரேயடியாகக் கூப் பாடு போட்டான். சின்னி அவனைச் சமாதானப்படுத்தி முத்துராமலிங்கத்தை வேலைக்குச் சேர்த்து விட்டுப் போனான்.

அந்த வேலை ஒன்றும் பிரமாதமாகவோ பெருமைப் படும் படியாகவோ இல்லை. படப்பிடிப்பு விவரங்கள். வசனக்கத்தைகள் அடங்கிய ஐந்தாறு நோட்டுப் புத்தகங் களைச் சுமந்து கொண்டே பாபுராஜூக்குப் பக்கத்தில் அணுக்கத் தொண்டன் மாதிரி சதா நிற்கவேண்டியிருந்தது. அவன் எப்ப்ோதாவது எதையாவது சொல்லிக் கேட்டால் நோட்டுப் புத்தகத்தில் அந்தப் பக்கத்தைப் பிரித்துக் காட்ட வேண்டியதுதான் இவலை. . . هي r

அவன் கைநாட்டுப் பேர்வழியோ, கத்துக் குட்டியோ - உரிமையாளரான முதலியாருக்கு வேண்டியவன் என்ற. முறையில் அங்கே எல்லாரும் பாபுராஜுக்குப் பயந்தார்கள். மரியாதை காட்டினார்கள். ஒத்துப் பாடினார்கள்.

ஏதுடா நாம ரொம்பப் படிச்சவனாச்சே, இவன் . நம்மை அதிகாரம் பண்றதாவது ஒண்ணாவதுன்னா நினைக்காதே! பணிவா அடக்க ஒடுக்கமா இருக்கர்ட்டி. இந்த ஃபீல்டிலே நீ எதுவுமே கத்துக்க முடியாது! ஜாக்கிரதை' என்று முப்பது நிமிஷங்களுக்குள் இருபது தடவையாவது துத்துராமலிங்கத்தை எச்சரித்து விட்டான் பாபுராஜ! அதிலிருந்து பாபுராஜின் காம்ப்ளெக்ஸ்’

புரிந்தது.