1 34 நிசப்த சங்கீதம்
'தப்பாவது சரியாவது? முதல்லே பணத்தை உள்ளே வையிங்க...என்கூட இந்த அறையிலே தங்க நீங்க எதுவும் இப்போ தர வேண்டாம்,'
வேறு வழியின்றி முத்துராமலிங்கம் நண்பர் சண்முகத் தின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. திருவல்லிக்கேணி-ராயப்பேட்டைப் பகுதியிலிருந்து அவன் கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்து சண்முகத்தோடு அறையில் தங்க ஆரம்பித்த பின்பு சின்னியை அடிக்கடி பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஸ்டுடியோவிலோ, சினிமாக் கம்பெனி அலுவலகத்திலோ, அறையிலோ வந்து பார்த்துக் கொண்டிருந்தான் சின்னி.
அவனைப் பார்க்கும் போதெல்லாம் முத்துராமலிங்கம் ஒன்றை நினைப்பது வழக்கமாயிருந்தது. அவனைப் போன்ற நல்லவர்கள் கர்மயோகிகளைப்போல் யாருக் காகவோ மாற்று ஆட்களாக இருந்து லாபம் தரும் கெடுதல் களைச் செய்து வாழ்வதுதான் இந்த நகரில் வழக்கமும் நடைமுறையுமாக இருந்தது. - -
அங்கே சிலர் தங்களுக்காக மட்டும் கெட்டவர்களாக இருந்தார்கள். வேறு சிலர் தங்களுக்காகவும் பிறருக்காக வும் சேர்த்துக் கெட்டவர்களாக இருந்தார்கள். மற்றும் "சிலர் பிறருக்காகவே கெட்டவர்களாக இருந்தார்கள். "கெட்டவர்களாக இராவிடிலோ அப்படிக் காண்பித்துக் கொள்ளாவிட்டாலோ தங்களைத் தலையெடுத்து வாழ விடாமல் மிதித்து நசுக்கிக் கொன்று விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை கலந்த தற்காப்பு உணர்வினால் சிலர் அப்படி இருக்க முயன்றார்கள். . . . .
அந்த வடபழநிக் கூட்டம் தொடர்ப்ாகப் போலிஸாரின் ஆத்துமீறலைக் கண்டித்தும், நியாயம் கேர்ரியும் தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம், இருந்தும் உடனே நல்ல விளைவுகள் எதுவும் நடந்து விடவில்லை. மந்திரியும் சிவகாமிநாதனின் அரசியல் எதிரிகளும் அவர்மேல் ஏராள மான பொய் வழக்குகளைப் போட்டிருந்தார்கள்.