豆苔套 . நிசப்த சங்கீதம்
"வந்து பேசுங்க...புரியும்.ப்ளீஸ்...வாங்க ஜீப்பிலேயே. போயிட்டு வந்துரலாம்."
... முத்துராமலிங்கத்துக்கும், சிவ கா மி நாத னு க் கு ம் ஒன்றும் புரியவில்லை. - -
"கொஞ்சம் இருங்க...இவங்களோட ஸ்டேஷனுக்குப் போய் என்னதான் விஷய்ம்னு தெரிஞ்சிட்டு வரேன்’என்று மங்கா அவர்களோடு புறப்பட்டாள். . புறப்படும் போது-
"மிஸ் மங்கா ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்குங்க எனக் குச் சிபாரிசு எதுவும் தேவையில்லை. என் பக்கம் நியாயம் இருப்பதே போதும்'-என்று சற்றே கடுமையான குரலில் இரைந்து சொன்னார் சிவகாமிநாதன். -
அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்காவிடம் மிகவும் மரியாதையாகவும், விநயமாகவும் நடந்து கொண்டார். ஜீப் புறப்பட்டதுமே அவர் அவளிடம் சொல்லத் தொடங்கி, விட்டார்: ... * . . . .
"நேத்து ஏதோ கூட்டத்திலே வழக்கு நிதி வசூலுக் குன்னு உங்க கை வளையலைக் கழட்டிப் போட்டீங்களாம். சிவகாமிநாதன் கிட்டத்தான் அந்த வளையல்கள் இருக்கும், அதை அவர் வீட்டிலே தேடி எடுத்து அவர் மேலே திருட்டுக் குற்றம் சாட்டி உள்ளே தள்ளப் பாருங்கன்னு மினிஸ்டர் சொல்றாரு. நீங்களோ இங்கே சிவகாமிநாதன் வீட்டிலேயே அவர்ோட சிஷ்யை மாதிரிப் பழகிக்கிட்டிருக் கீங்க...எங்களுக்கு என்ன செய்யிறதுன்னு இப்பத் தர்ம. சங்கடமா இருக்கு...' -
நானே விரும்பிக் குடுத்தது எப்படித் திருட்டாகும்: இது திருட்டுன்னாக் கட்சி நிதி, சிலை வைக்க நிதி, நினைவு. மாளிகை நிதி. சிறப்பு மாநாட்டு வசூல்னு எங்கப்பா அடிச்சிருக்கிற ஒவ்வொரு கொள்ளைக்கும் அவரை நீங்க. கிரந்தரமா ஜெயில்லேயே வச்சிருக்கணும். வெளி இ, விட்டிருக்கக் கூடாது." * . . . . . . . .