1亨笼 நிசப்த சங்கீதம்
- 'இதெல்லாம் உங்களுக்கே நல்லா இல்லீங்க! பேச்ாம மினிஸ்டரோட டாட்டரைக் கூப்பிட்டு ரெண்டு வார்த்தை புத்தி சொல்லி வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வையுங்க."
அதெல்லாம் நான் ஏற்கெனவே சொல்வியாச்சு அவ கேக்கலை. இப்பவும் நான் சொல்லத் தயார்! உங்க வீட்டுப் பெண்ணை நீங்க கூப்பிட்டுக்கிட்டுப் போக நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனா அதே சமயம் உங்களை வெறுக்கிற ஒரு பெண்ணை நீங்க பலவந்தமா இழுத்துக்கிட்டுப் பேர்க வும் நான் ஒத்துழைக்க மாட்டேன்."
-என்று கூறிவிட்டு உள்ளே ப்ரூஃப் எடுத்து வரப் போயிருந்த மங்காவைக் கூப்பிட்டு, "இந்தாம்மா! உங்கப்பா கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்னு இவங்க இங்கே தேடி வந்திருக்காங்க. உன்னை நான் இங்கே தடுத்து நிறுத்தி வச்சுக்கிட்டு ஏதோ பிளாக் மெயில் பண்ணி உங்கப்பாவை மிரட்டற மாதிரி இவங்க எங்கிட்டப் பேச றாங்க. எனக்கு அது பிடிக்கல்லே. உனக்குச் சம்மதமானா இவுங்ககூட நீ தாராளமாத் திரும்பி.வீட்டுக்குப் புறப்பட்டுப் போகலாம். சம்மதமில்லேனாலும் நான் உன்னை வற் புறுத்தித் துரத்த மாட்டேன்' என்றார் சிவகாமிநாதன். மங்கா பதில் கூறினாள்: "நீங்க என்னை இங்கே வரச் சொல்லிக் கூப்பிடலே ஐயா! நான்தான் உங்ககிட்ட வந்து அடைக்கலம் புகுந்திருக்கேன்...அடைக்கலமா வந்தவங் களை நீங்க துரத்தவோ வெளியேற்றவோ மாட்டீங்கங்கிற நம்பிக்கை எனக்கு உண்டு ஐயா.' . . .
கேட்டுக்குங்க இதுதான் உங்களுக்கு அவ பதில். இதில் நான் செய்ய என்ன இருக்கிறது: - "அப்பாவுக்கும் பெண்ணுக்கும் ஆகவிடாமல் நீங்க தான் அவ மினசைக் கெடுத்து வச்சிருக்கீங்க,’’
என்னிக்கும் யார் மனசையும் கெடுக்கற தொழிலை நான் செஞ்சதில்லை-செய்யவும் மாட்டேன்.