卫恕4 நிசப்த சங்கிதம்
யாருக்கும் கெடுதல் செய்யவே வேணாம். சும்மா நல்லவங்க களா இருந்து நல்ல காரியம் பண்ணணும்னு முயற்சி பண்ணினிங்கன்னாலே போதும், 'உங்களுக்குக் கெடுதல் பண்ண ஆள்வரும். உங்களாலே யாருக்கும் கெடுதல் பண்ண முடியாதுன்னாலே போதும். உங்களுக்குக் கெடுதல் பண்ண ஓடி வந்துடு வாங்க. அதுதான் இன்னிக்கு நடை முறை. இந்த நடைமுறை புரியாம நம்ப சிவகாமிநாதன் சார் எதிர் நீச்சல் போட்றார். அதனால்தான் இத்தின் கஷ்டமும்.' . பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்னு: பாரதியார் பாடியிருக்காரு.' - .
"அந்த மகாகவியோட வார்த்தைகள் சரியான தீர்க்க தரிசனம். அதுக்கு அட்சர லட்சம் குடுக்கணும்.’’ என்றடாக்டரை இடைமறித்து, முத்துராமலிங்கம் வினவினான். 1. நான் வெளியிலே மூவ் பண்ணலாமா டாக்டர் விடிகாலை யிலே தியாகி சாரை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க...ஜெயில்லே போயி அவரைப் பார்க்கணும். முடியுமா? ப்ளீஸ்-' . -
"நானும் கேள்விப்பட்டேன். மந்திரிங்க வார்த்தை. யைக் கேட்டுப் போலிஸ் ரொம்பத்தான் அக்ரமம் பண்றாங்க...நானும் கூட அவரைப் பார்க்க வரணும் ...ரவுண்ட்ஸ் போயிட்டு வந்தப்புறம்..சேர்ந்தே போக வாம்...எல்லாரும் பதினோரு மணிக்கு ரெடியா இருங்க! நானே ஜெயில் சூப்ரண்டுக்குப் போன் பண்ணி ஏற்பாடு: செய்யறேன்.' - - .
-டாக்டரே இப்படிக் கூறியதும் எல்லாரும் சம்மதித் தார்கள். கூட்டத்தில் நடந்த வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவிப்பது போல் மிகவும் பெருந்தன்மையாக அறிக்கை. விட்டுவிட்டு உள் ஏற்பாடாகச் சிவகாமிநாதன் மேல் பொய்க்குற்றம் சுமத்தி அவரை அரெஸ்ட் செய்து ஜெயில் லிலே வைத்திருக்கும் கொடுமையை எண்ணி வியந்தார்கள்