பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 185

பெருந்தன்மை, நேர்மை ஒழுக்கம் முதலிய நற்பண்பு களை எதற்கோ அலிபி'யாகவே வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் இலக்கணத்திற்கு ஏற்பத்தான் மங்கா வின் தந்தையும் நடந்து கொண்டிருந்தார். இரட்டை வேஷம் போட்டிருந்தார். -

அவரது நேர்மை, ஒழுக்கம், மதச்சார்பின்மை, பிறர் நலம் பேணல் எல்லாமே ஓர் 'அலி.பி ஏற்பாடாக அவ்வப் போது தெரிந்தனவே ஒழிய இயல்பாயில்லை.

உதவிக் காமிராமேன் சண்முகமும் முத்துராமலிங்கமும் நிலைமையைப் பற்றித் தங்களுக்குள் விரிவாக விவாதித் தனர்: இளைஞர்களைச் சிவகாமிநாதன் தலைமையில் -ஒன்று திரட்டி லஞ்சம், ஊழல் சந்தர்ப்பவாதம் ஆகிய வற்றைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள் அவர்கள். - -

இத்தனை கொடுமைகளையும். எதிர்ப்புக்களையும் இடை யூறுகளையும் தாங்கிக்கொண்டு கால் நூற்றாண்டுக் கால மாகப் போராடிவரும் தியாகி சிவகாமிநாதன் முள் முடி தாங்கி முழு வேதனையோடு அங்கமெல்லாம் ஆணியால் குத்தப்பட்டுப் புண்ணாகி நின்ற ஏசுயிரானைப்போல் பொறுமையாகத் தன் வேதனைகளைச் சகித்தபடி எதிர் நீச்சலிடுவதாக அவர்களுக்குத் தோன்றியது. -

'தங்களை ஏமாற்றுகிறவர்களையே தலைவர்களாக :நினைக்கும் மெளட்டீக மனப்பான்மை தீர்ந்து மக்கள் விழிப் படையாதவரை இங்கே எதையும் சாதிக்க முடியாது! சாத்வீகப் போராட்டத்துக்கு வேண்டிய ஆன்ம பலமும் இல்லாமல் வன்முறைப் புரட்சிக்கு வேண்டிய வைரமும் இல்லாமல் இரண்டுங்கெட்டான்ாக இருக்கும் மக்கள் சமுதாயத்தில் இப்படித்தான் நடக்கும். இதுதான்

நடக்கும்' என்றார் சண்முகம். . . . . -

பதினொரு மணிக்கு டாக்டர் வந்தார்.அவர் காரிலேயே எல்லாரையும் அழைத்துக் கொண்டு மத்திய சிறைச்