நா. பார்த்தசாரதி • 205
கோடி-கதர் வேஷ்டி, அங்கவஸ்திரமும், மங்காவுக்கு ஓர் எளிய கை தறிப் புடவையும் இரண்டு மாலைகளும், தாவியும், மஞ்சள் கயிறும்தான் ஏற்பாடு பண்ணியிருந்தார். வேறு எந்த ஆடம்பர ஏற்பாடும் கிடையாது. * , a
பத்துநாள் கழித்து ஒர்அதிகாலை ஐந்து மணியிலிருந்து ஆறறை மணிக்குள்ளான நல்லவேளையில் மாங்காடு அம்மன் கோயிலில் மங்காவுக்கு முத்துராமலிங்கம் தாலி கட்டின்ான். இருவரும் தியாகி சிவகாமிநாதன் ஆசீர்வதிக்க அவருக்கு முன்னால் மாலை மாற்றிக் கொண்டார்கள். திருமணம் எளிமையாகவும் கச்சிதமாகவும் முடிந்துவிட்டது அநாவசியமான சடங்குகள் எதுவும் அங்கே இல்லை.
மாங்காடு ஆலயத்தில் கூடியிருந்த இருபது முப்பது தொண்டர்களுககு நடுவே சிவகாமிநாதன் சில வார்த்தை கள் பேசினார். - - : *
இது ஏறக்குறைய அடைக்கலத் திருமணம். இதை நான் எந்த விதத்திலும் தட்டிக் கழிக்க முடியவில்லை, முடியாது. பெண்ணின் தந்தை என் அரசியல் எதிரி. பெண்ணோ என்அரசியல் சிஷ்யை. பெண்ணின் காதலனோ என் அரசியல் தொண்டன். இவர்களுக்கு வரும் கஷ்ட நஷ்டங்களை இனி என் கஷ்ட நஷ்டமாக ஏற்பேன். என் மேல் நம்பிக்கையுள்ள நீங்களும் அப்படி ஏற்கவேண்டும் என்பது என் விருப்பம், நம்மைச் சுற்றிலும் தென்படுகிற அல்லது நாம் பார்க்கிற சினிமாக்களில் வருகிற காதலர் களைப் போல் இவர்கள் இருவரும் பூங்காக்களில், குளக் கரையில். மரத்தடியில் நதிக்கரையில் சந்தித்துப் பழகிய சராசரிக் காதலர்கள் இல்லை. : -
இவர்களை இணைத்ததே இவர்களிருவருக்கும் எனது. இலட்சியங்களில் இருந்த பிடிப்புதான். என் க்ாரணமாக இணைந்த இவர்களை நான் கைவிட மாட்டேன். இவர்கள் இன்று சாதாரணத் தம்பதிகள். ஆனால் இப்படித் தம்பதி களானதன் மூலம் இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கும் எதிரிகள் என்னவோ சாதாரணமானவர்கள் இல்லை. அந்த