பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நிசப்த சங்கிதம்

கவிதையைத் தேசப் பக்தியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த மனப்பாங்கோடு உள்ளமுருகி எழுதப்பட்டது:என்று வருணித்து அதில் மோசம் காண முயன்றது கவிதை யைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையினால்தான் இருக்க வேண்டும் என்று பாராட்டியிருந்தார். மாலைப் பத்திரிகைகள் தீர்ப்பை முதல், பக்கத்தில் பிரசுரித்தன. காலைத் தினசரிகள் கோர்ட் வாசலிலேயே முத்துராம. விங்கத்தைப் பேட்டி காண முந்தினபோது அங்கே ஆவல். அலை மோதியது. - -

34

ஒரு கவிதையை எழுதியதற்காகச் சிறை சென்று: மீண்ட அநுபவமும், தன்னை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் வார்த்தைகளாலேயே அந்தக் கவிதை வானளாவப் புகழ்ப்பட்டிருந்ததும் முத்துராமலிங்கத்தைப் பிரபலமாக்கின. அவன் பெயர் எங்கும் பரவியது. அவனை இரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். பின்பு, காமிராமேன் சண்முகத்தின் உதவியால் புதிய தயாரிப்பாளர் ஒருவ: குடைய படத்துக்குச் சில பாடல்கள் எழுதினான் அவன். நன்றாக வாய்த்துவிட்ட காரணத்தால் படம் பிரபலமாகி வெளிவருவதற்குள் பாடல்கள் வெளிவந்து பிரபலமாகி, விட்டன. பாடல்களுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து. வேறு சில தயாரிப்பாளர்களும் அவனைத் தேடி வந்தனர்.

முன்பு எந்தத் திரை உலகில் முந்நூறு ரூபாய்க்காகப் பாபுராஜ் போன்ற கைநாட்டுப் பேர்வழிகளுக்கு முன்னால் கைகட்டி வாய் பொத்தி நிற்க நேர்ந்திருந்ததோ அதே. திரை உலகில் அவன் பெயர் இப்போது பரவிச் சுதந்திர மாகக் காலூன்றி நிற்க அவனுக்கு இன்று ஒர் இடம். கிடைத்திருந்தது.

இப்போது முத்துராமலிங்கம் மாதம் தவறாமல் ஊருக் குப்பணம் அனுப்பினான். அவனும் மங்காவும் தொடர்ந்து சிவகாமிநாதனோடு கூடவே வசித்தார்கள். அவருக்காக இழைத்தார்கள். பொழுது விடிந்து பொழுது போனால்,